தவெக ஆட்சி குறித்து நான் விமர்சித்தேனா? உப்பை போல் எளிமையான தலைவன் விஜய்! நாஞ்சில் சம்பத் புகழாரம்

  • சென்னை: தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். தவெக ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருவது என் தலைமை அறியும் என பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாவது: உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய்.

    Advertisement

    இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் விஜய்யின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English Summary

    Nanjil Sampath says some are spreading fabricated news that i am criticizing TVK government. He says that Vijay is a leader as simple as salt.