பேங்க்ல பணம் போட போறீங்களா? இன்னைக்கு வேலை நடக்காது! நாடு முழுவதும் ஸ்டிரைக் அறிவித்த ஊழியர்கள்

  • சென்னை: வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. இதனால் இன்று வங்கிகளில் நேரடி பண பரிவர்த்தனை பாதிக்கப்படலாம்.

    Advertisement

    ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசு ஊழியர்களை போல தங்களுக்கும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை அளிக்க வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாகும். இதற்காக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய ஒப்புக்கொண்டும், மத்திய நிதி அமைச்சகம் இந்த கோரிக்கைக்கு இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை.

    Advertisement

    அதேபோல, செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே உள்ள பாரபட்சமான அணுகுமுறையை வங்கி ஊழியர்கள் எதிர்க்கின்றனர். மேலும், அரசு திட்டங்கள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே செயல்படுத்தப்படுவதால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுபோக, புதிய ஓய்வூதிய திட்டத்தை, பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்றுவது மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி திருத்தம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். மத்திய அரசு ஊக்கத் தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறிய போதிலும், 5 நாட்கள் வேலை வார கோரிக்கையில் தெளிவான முடிவை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Nationwide bank strike today: Bank employees across the country have launched a nationwide strike today to press for various demands, including a five-day work week. As a result, in-person banking transactions may be affected today.