சென்னை: கோடிகளில் பிசினஸ் செய்யும் தமிழ் நடிகைகள் வெகுசிலர் இங்கு உண்டு.. வெள்ளித்திரையின் மின்னும் விளக்குகளையும் கேமரா வெளிச்சத்தையும் தாண்டி, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகள் தங்களின் வணிகத் திறமையால் பெரும் தொழில்சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகிறார்கள். வெறும் நடிப்புடன் நின்றுவிடாமல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொந்தமாக பல தொழில்களைத் தொடங்கி, அதில், வெற்றிகரமான தொழிலதிபர்களாகவும் வலம் வருகிறார்கள்.. அதில் ஒருசில பற்றி இங்கே பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, நடிப்பில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.
இவர் 9 ஸ்கின் (9 SKIN) என்ற உலகத்தரம் வாய்ந்த சருமப் பராமரிப்பு பிராண்ட் மற்றும் "தி லிப் பாம் கம்பெனி" (The Lip Balm Company) ஆகிய அழகு சாதன நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த காஸ்மெடிக்ஸ மட்டுமல்லாம்ல, "ரௌடி பிக்சர்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து சினிமாவில் புரொடியூசராக முத்திரை பதித்து வருகிறார். அடுத்ததாக, தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமான சமந்தா ரூத் பிரபு, தனது மல்ட்டி-திறமையால் ஒரு பெரிய லைஃப்ஸ்டைல் சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். பெண்களுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பான "சாகி" (Saaki) ஆடை பிராண்ட், "சீக்ரெட் அல்கெமிஸ்ட்" (Secret Alchemist) என்ற வாசனைத் திரவிய நிறுவனம் மற்றும் "எஸ்.வி.எஸ் பார்ட்னர்ஸ்" (SVS Partners) முதலீட்டு நிறுவனம் போன்றவற்றை சிறப்பாக நிர்வகித்து வருகிறார். இதனை தவிர, "டிராலலா மூவிங் பிக்சர்ஸ்" என்ற சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புது புது படைப்புகளையும் உருவாக்கி வருகிறார். பன்முகத் திறமை கொண்ட நடிகையான ஸ்ருதி ஹாசன், தொழில்துறையிலும் தடம் பதிக்கும் நோக்கில் "இசிட்ரோ" (Isidro) என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் முக்கியமாக குறும்படங்கள், அனிமேஷன் படங்கள் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இவருடைய பிஸியான ஷூட்டிங் ஷெட்யூல் காரணமாக, இவரது தங்கை அக்ஷரா ஹாசன் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை முன்னின்று நிர்வகித்து வருகிறாராம். புன்னகை அரசி சினேகா, சென்னை தியாகராய நகரின் மையப்பகுதியில் "சினேகாலயா சில்க்ஸ்" (Snehalaya Silks) என்ற பிரம்மாண்டமான பட்டுப் புடவை நிறுவனத்தை நடத்தி, பாரம்பரிய உடைகளின் வழியே வெற்றிகரமான பெண் தொழிலதிபராகத் திகழ்கிறார். அதேபோல், லீடிங் நடிகையான தமன்னா "ஒயிட் அண்ட் கோல்ட்" (Wite & Gold) என்ற பிரத்யேக ஆன்லைன் நகை வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ஆபரணத் துறையில் புதிய ட்ரெண்டை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார். அம்மா கேரக்டரில் நடித்து, முத்திரை பதித்த மூத்த நடிகை சரண்யா பொன்வண்ணன், தனது கலைத்திறனை தாண்டி "டிசாஃப்ட்" (DSOFT) என்ற ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் பயிற்சி பள்ளியை நடத்தி, பல பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தந்து வருகிறார். உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், "F45" (F45 Training) என்ற சர்வதேச உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வருவதுடன், உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் உணவு பிராண்டுகளை இந்திய மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் பிசினஸிலும் ஈடுபட்டுள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகை ஸ்ரியா சரண், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உன்னத நோக்கத்தோடு, பார்வைத் திறனற்ற நிபுணர்களைக் கொண்டு இயங்கும் "ஸ்ரீ ஸ்பா" (Shree Spa) என்ற தனித்துவமான ஆரோக்கிய நிலையத்தை நடத்தி வருகிறார். அதேபோல வெள்ளித்திரையில் பிரபலமான ஸ்ருதிகா அர்ஜுன், 'ஸ்ருதிகா காஸ்மெடிக்ஸ்' (Shrutika Cosmetics) என்ற பெயரில் தனது சொந்த அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தைத் தொடங்கி இளைய தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். ஆகமொத்தம் சினிமாவில் நடிப்புத் திறமையையும் தாண்டி, தங்களின் தனித்துவமான திட்டமிடலாலும், கடினமான உழைப்பாலும் இந்த தென்னிந்திய நடிகைகள் கார்ப்பரேட் உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்....!!!"தி லிப் பாம் கம்பெனி"
ஸ்ருதி ஹாசன் பிசினஸ்
ஆன்லைன் நகை டிசைனிங்
தொழிலதிபர் முகம்