மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் நயன்தாரா.. சென்னை காளிகாம்பாள் கோயிலில் அவர் செய்ததை கவனிச்சீங்களா?

  • சென்னை: தீபாவளிக்கு வெளியாக உள்ள "மூக்குத்தி அம்மன் 2" படம் வெற்றி பெற வேண்டி நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். அம்மனை தரிசனம் செய்ததுடன், கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்திலும் பங்கேற்றார். ஆனால் கோயிலுக்கு வந்த நயன்தாரா வழிபாடு முடித்ததுமே, அங்கு செய்த காரியம்தான் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.. அது என்ன தெரியுமா

    Advertisement

    கடந்த 2020-ம் வருடம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இதில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். பக்தியை மையமாகக் கொண்ட கதையில் காமெடி மற்றும் சமூகக் கருத்துகளும் இடம்பெற்றிருந்தன. இதனால் குடும்ப ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    Advertisement

    முக்கியமாக அம்மன் கெட்டப்பில் நயன்தாரா நடித்திருந்தது ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

    சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2

    முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா, சினேகா, துனியா விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    சுந்தர்.சி இதுவரை டைரக்ட செய்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமாக மூக்குத்தி அம்மன் 2 கூறப்படுகிறது. முதல் பாகத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து, இந்தப் படத்திலும் பக்தி, சென்ட்டிமெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதிலும் சுந்தர் சி படம் என்றால் காமெடிகள் இல்லாமலா? இந்த படம் முழுக்க காமெடிகளையும் அள்ளி தெளித்திருக்கிறார்களாம்.

    Advertisement

    கிராஃபிக்ஸ் சீன்கள் சர்ச்சை

    இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானபோது, அதில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த நயன்தாரா, படத்தை பார்த்துவிட்டு கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தார்.

    2031-ல் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு இதுதான்!

    இதனிடையே, படத்தின் கதையை அறிமுகப்படுத்தும் வகையில் ஸ்பெஷல் புரமோ வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வல்லநாட்டின் காவல் தெய்வமாக இருக்கும் மூக்குத்தி அம்மன் தனது அவதாரத்தை முடித்துக்கொண்டு சென்றுவிடுகிறார். இதையடுத்து அந்த ஊர் தீய சக்திகளின் பிடியில் சிக்குவது போன்ற காட்சிகள் வருகின்றன.

    Advertisement

    அப்போது மீண்டும் வரும் அம்மன், மக்களைக் காப்பாற்றுவது போல நயன்தாராவின் கேரக்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

    நவம்பர் 6-ல் ரிலீஸ்

    இத்தனை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த படம், வருகிற நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் வெற்றிக்காக நயன்தாரா கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் படம் வெற்றி பெற வேண்டி, சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் நயன்தாரா.. நேற்றைய தினம் கோயிலுக்கு வந்த நயன்தாரை பார்ப்பதற்காக, பக்தர்கள் பலரும் ஆர்வம் காட்டினார்கள்.. கோயிலில் அம்மனை தரிசனம் செய்த நயன்தாரா, மூக்குத்தி அம்மன் 2 ம் பாகம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு யாகத்திலும் கலந்து கொண்டார்.

    Advertisement
    சந்தோஷமாக திரிஷா வெளியிட்ட பதிவு.. நயன்தாரா கொடுத்த ரியாக்ஷன்.. குவியும் கமெண்ட்ஸ்

    அம்மன் அலங்காரத்தில் நயன்தாரா

    இந்த கோயில் வருகையில் நயன்தாரா அணிந்திருந்த உடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாரம்பரிய உடையில், அம்மன் வேடத்துக்கு ஏற்ற அலங்காரத்துடன் கோயிலுக்கு வந்திருந்தார். ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தில் அம்மனாக நடித்திருந்த நயன்தாரா, இப்போது இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் நடிப்பதால் இந்த கெட்டப் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

    வழிபாட்டுக்கு பிறகு கோயிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்களுக்கு நயன்தாரா புடவைகளை அன்பளிப்பாக வழங்கினார். 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் புடவைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. புடவைகளுடன் பூக்கள் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

    Advertisement

    நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பக்தர்கள் ஆர்வம் காட்டியதால் கோயிலில் அவர் வருகை கவனத்தைப் பெற்றது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன...!!

    English Summary

    Nayanthara Visits Chennai Temple in Mookuthi Amman Look.. What Did She Do at Kalikambal Temple?