சாலை என்பது போராடுவதற்கான இடம் கிடையாது.. மாணவர்களை கைது செய்வது ஏன்? ராஜ்மோகன் கொடுத்த விளக்கம்!

  • சென்னை: சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மாணவர்கள் அறவழியில் போராடினால் மட்டும் ஆதரிப்போம் என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சோனம் வான்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் சிஜேபி கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கேவின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    Advertisement

    நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர், மாணவர்கள் பேரணியாக சென்ற நிலையில், அவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு காவல்துறை நடத்திய தாக்குதல் வீடியோக்கள் நாடு முழுவதும் பரவின.

    இது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களை காவல்துறை குண்டுகட்டாக கைது செய்தது. இதற்கு திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    Advertisement

    இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக போராடிய மாணவர்களை கைது செய்தது ஏன் என்ற கேள்வின் அமைச்சர் ராஜ்மோகனிடம் எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை தவெக ஆதரிக்கிறது. அதேபோல் ராகுல் காந்தியின் கைதை நாங்கள் கண்டிக்கிறோம். இங்கு அதையொட்டி நடக்கும் போராட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

    தூண்டுதலின் பெயரிலோ, மக்களுக்கு இடையூறு செய்தால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீட் தேர்வு ரத்து தான் தவெகவின் நிலைப்பாடு.. நீட் சீரமைப்பு என்பது தவெகவுக்கு ஏற்புடையது அல்ல.. ஒரு போராட்டத்தின் மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.. சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். டெல்லியில் ராகுல் காந்தியை ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டு கைது செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    NEET: Roads Are Not for Protests, Minister Rajmohan Condemns NEET Demonstrations, Supports Only Peaceful Means