உணவு பொருள் விலைவாசி உயரவில்லை.. எல்லாம் நார்மலா இருக்கு.. கூலாக சொல்லும் அமைச்சர் வெங்கடரமணன்

  • சென்னை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாக போகிறது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்படுகிறார்கள். அதை புரிந்து கொள்ளாமல் அமைச்சர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைவாசி உயரவில்லை என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னையில் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " விலைவாசி உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாடு குறித்து நிறைய பத்திரிகை செய்தியில் பார்த்தேன். உணவுப் பொருள் தட்டுப்பாடு எங்கும் இல்லை. அது உருவாக்கப்பட்ட பிம்பம். அந்த மாதிரி எதுவுமில்லை. தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்காக சொல்லப்பப்பட்ட பொய் இது. பத்திரிகையில் பொய் கோரிக்கைகளை வைக்கிறார்கள். பலரும் பலவிதமாக பேசுகிறார்கள்.

    Advertisement

    விலைவாசி உயரவில்லை

    விலைவாசி ஏற்றம் குறித்து தினசரி மாலை மாவட்டம் தோறும் 61 பொருட்களை ஆய்வு செய்வோம். ஒரு நாள் இரண்டு நாள், பல காலமாக தினசரி ஆய்வு செய்வது வாடிக்கை. நேற்று கூட அரிசி விலை, சர்க்கரை விலை ஏறியிருக்கிறது என்றனர். அப்படி எதுவுமே ஏறவில்லை. எல்லாமே சராசரி விலையில் இருக்கிறது. 2 அல்லது 3 ரூபாய் விலை ஏறும். சீஸனை பொறுத்து மழைக்காலமாக இருந்தால் சில பொருட்கள் அவ்வபோது விலை ஏறும். அது முடிந்ததும் விலைவாசி குறையும்.

    அதைபோல பண்டிகை காலங்களில் விலைவாசி அதிகமாக இருக்கும். சில நேரங்களில் குறையும். என்ன தேவை இருக்கிறதோ, அதற்கான விநியோகம் இருக்கிறது. இதுதான் நடைமுறையில் உள்ளது. உணவு பற்றாக்குறையோ அல்லது விலைவாசி உயர்வோ இல்லை. எல்லாம் நார்மலாத்தான் இருக்கு. சில பொருட்களை பொறுத்தவரை, கர்நாடகா பொன்னி, தெலங்கானாவில் இருந்து சில பொன்னி ரக அரிசி வர வேண்டும். செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை குறுவை சாகுபடி உள்ளது.

    Advertisement

    எல்லாம் நார்மலாக உள்ளது

    இது தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கும். மற்ற பகுதிகளில் அக்டோபரில் தொடங்கி செப்டம்பர் வரை இருக்கும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்கள் நம்மிடம் உற்பத்தி குறைவாக இருக்கும். மழையும் குறைவாக இருக்கும். ஜனவரியில் சம்பா சாகுபடி வந்ததும் உற்பத்தி அதிகமாகிவிடும். கடந்த ஆண்டில் 13 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி சாகுபடி இருந்தது. இந்தாண்டும் 7 லட்சம் மெட்ரிக் டன் சாகுபடியாக வாய்ப்புள்ளது.

    ஜனவரி முதல் ஆகஸ்ட் காலத்தில் 60 லட்சம் மெட்ரிக் டன் சாகுபடியாக வாய்ப்புள்ளது. எல்நினோவால் உணவு, தண்ணீர் பிரச்சனை வரவாய்ப்புள்ளது. பலரும் கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். ஒன்றிய அரசு மூலமாக கருத்துகளை முன்வைத்துள்ளோம். தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லை. தேவையான அளவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்புடன் வைத்துள்ளோம். எல்லாவற்றையும் கண்காணிக்கிறோம். விலை ஏற்றம் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    English Summary

    Minister Venkatramanan said, neither food product shortage Rising price. everything is normal.