எவ்வளவு பேர் வருவார்கள்னு தெரியலை.. சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 57 பேரின் கதி என்ன? சோகம்

  • சென்னை: நேபாளத்தில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் நேபாளம் சென்ற நிலையில் அவர்கள் பயணித்த ஒரு பஸ் பள்ளத்தில் விழுந்துவிட்டதாகவும், பெரிய விபத்து என்பதால் அதுபற்றி வாயால் சொல்ல முடியாது. எவ்வளவு பேர் வருவார்கள் என்பது தெரியவில்லை என்று சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நேபாளத்தில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கைலாய யாத்திரை உள்பட சுற்றுலாவிற்கு சென்ற இந்தியர்கள் 105 பேர் அங்கு சிக்கி உள்ளனர். இந்நிலையில் தான் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் 57 பேர் நேபாளம் சென்ற நிலையில் அவர்கள் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இதுபற்றி சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் சொன்ன தகவல் கலங்க வைத்துள்ளது. இவர் தான் 57 பேரை சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

    இதுபற்றி சாதிக் கூறியதாவது: ''தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கைலாய யாத்திரைக்காக 57 பேரை அழைத்து சென்றோம். சென்னையில் இருந்து இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் சென்றனர். காத்மாண்ட்டுவில் தங்கவைத்து மீட்டிங்கை முடித்தோம். அதன்பிறகு மறுநாள் யாத்திரையை அனுப்பிவிட்டு வந்தேன். நேற்று இரவு கூட பேசினோம். நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

    இன்று காலை 9 மணிக்கு பேசினோம். ஒரு பஸ்சில் ரகு, இன்னொரு பஸ்சில் என்னுடைய மகன். இன்னொரு பஸ்சில் மயிலாடுதுறையை சேர்ந்த வெங்கடரமணன் என்ற 3 பேர் தலைமையில் புறப்பட்டனர். ரகு என்பவரிடம் பேசினோம். வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் நிலஅதிர்வு வந்துவிட்டது. ஒரு வண்டியை தான் நாங்க காப்பாத்தினோம். திரும்பி பார்த்தபோது ஒரு வண்டி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அதை நாங்கள் பார்த்தோம் என்று சொன்னார்.

    Advertisement

    கீழே இறங்கி பார்க்க முடியுமா? என்று கேட்டேன். ஆனால் கீழே இறங்கி பார்க்க விடவில்லை. பாதுகாப்பு கருதி அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை என்றார். அடுத்து என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. மிலிட்டரியிடம் சொல்லி கவிழ்ந்த பஸ்சை தேடிகொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். பெரிய விபத்து என்பதால் ராணுவத்துக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார்.

    ஏனென்றால் பெரிய விபத்து. அதனை வாயால் சொல்ல முடியாது. இதனால் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது தெரியவில்லை. ஆண்டவன் தான் வழி சொல்ல வேண்டும்'' என்று கலங்கியபடி கூறினார்.

    English Summary

    A flash flood occurred in Nepal today. Amidst this, Sadiq, the owner of Super Yatra Agency, stated that a group of 57 people from various parts of Tamil Nadu had traveled to Nepal on a single flight from Chennai; the bus they were traveling in plunged into a ravine, and he described it as a major accident that was difficult to put into words, adding that it was currently unknown how many of them would return.