நேபாள வெள்ளம்: “செடி கொடிகளை பிடித்துக்கொண்டு மலையில் ஏறினோம்”.. மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பேட்டி!

  • டெல்லி: "தமிழர்கள் இருந்த 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. செடி, கொடிகளை பிடித்து நாங்கள் மலையில் ஏறினோம்" என மீட்கப்பட்ட தமிழர்கள் தெரிவித்துள்ளனர். நேபாள வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.

    Advertisement

    நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்துப் பாதைகளும் பாலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக நேபாளத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்களில் 21 பேர் அசம்பாவிதத்தில் சிக்காமல் தப்பித்த நிலையில், மீதமுள்ள 36 பேரின் நிலை என்ன என்று தெரியாமல் உள்ளது.

    தமிழர்கள் சென்ற 3 வாகனங்களில் முன்னும், பின்னும் வந்துகொண்டிருந்த 2 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நடுவில் சென்ற வாகனத்தில் இருந்த 21 தமிழர்கள்தான் தற்போது உயிர் தப்பினர். அவர்கள் காத்மண்டுவில் இருந்து தற்போது டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    Advertisement

    மீட்புப் பணிகளை உடனடியாக ஒருங்கிணைக்கவும், டெல்லியில் முகாமிட்டுப் பணிகளைக் கண்காணிக்கவும் சிறப்பு அமைச்சர்கள் குழுவை நியமித்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய். இந்நிலையில் நேபாள வெள்ளத்தில் தப்பித்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை, தமிழ்நாடு அமைச்சர்கள் குழு சந்தித்து வரவேற்றது.

    டெல்லியில் இருந்து 21 தமிழர்களும் விமானம் மூலம் சென்னை திரும்பி உள்ளனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், சரத்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீட்கப்பட்ட பெண்கள், ""தமிழர்கள் இருந்த 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. செடி, கொடிகளை பிடித்து நாங்கள் மலையில் ஏறினோம். எங்களுடன் வந்த மற்றவர்களை மீட்க தேடிப் பார்க்கவேண்டும். எங்களுக்கு அங்கு 2 நாட்களாக சிக்னல் கிடைக்கவில்லை. அவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கும்பகோணம் பகுதியில் இருந்து சென்ற 57 பேரில் மீதமுள்ள 36 பேர் பற்றிய தகவல் கிடைக்கப் பெறவில்லை. அவர்களைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. தொடர்ந்து அந்தப் பேருந்துகளில் பயணித்தவர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    “Two buses carrying Tamils ​​were swept away by the floodwaters. We climbed the mountain by holding onto the vegetation,” said the rescued Tamils. Twenty-one Tamils ​​who were rescued after being stranded in the Nepal floods have returned to Chennai.