இரக்கமே கிடையாது.. பைக் டாக்ஸிக்கு எதிராக புகார்.. சென்னை ஆட்டோ ஓட்டுநர்களை விளாசும் நெட்டிசன்கள்

  • சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீசாரிடமும், போக்குவரத்து துறை அதிகாரிகளிடமும் பைக் டாக்ஸிக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும் போது, சட்டவிரோதமாக பைக் டாக்சி ஓட்டுறாங்கனு புகார் அளித்தால் எங்க கிட்ட ஆட்கள் இல்லை நீங்களே புடிச்சி கொடுங்கனு சொல்றாங்க RTO.. சரினு எங்க மொபைல்ல பைக் டாக்சி புக் பண்ணி அவங்கள் புடிச்சி கொடுத்தா எங்க மேலயே புகார் கொடுக்குறாங்க.. எங்களோட வருமானத்தை பைக் டாக்சிங்கிற பேர்ல திருடிட்டு போய்ட்டு இருக்காங்க என்று கவலையை வெளிப்படுத்தினார்கள். இவர்களுக்கு நெட்டிசன்கள் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அத்தனை பேருமே ஆட்டோ ஓட்டுநர்களை விமர்சித்தார்கள்.

    Advertisement

    நெட்டிசன்கள் கூறிய தகவல்கள் ஒவ்வொன்றையும் அப்படியே வரிசையாக பார்ப்போம்.

    Advertisement

    ஒரு நெட்டிசன் கூறுகையில், "நீங்கள் போட்ட ஆட்டத்துக்கு தான் இன்னிக்கு இப்படி நடக்குது. நீங்கள் தனிமனிதன் மீது வழக்கு தொடுப்பது தவறு என்றால், ஒரு தனி மனிதனை பிடித்து கொடுத்து அவருக்கு அபராதம் வாங்கிக் கொடுப்பது எப்படி நியாயம்? சரியாக யோசித்தால் அந்த நிறுவனத்தின் மீது தானே வழக்குத் தொடுக்க வேண்டும்." என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    இன்னொருவர் "தமிழ்நாடு முழுக்க மீட்டருக்கு இவ்வளவு என்று பிக்ஸ் பண்ணுங்க. அதை மீறி ஒரு ரூபாய் வாங்க மாட்டோம் சொல்லுங்க.. அதே மாதிரி 3 பேர் மட்டும் அனுமதின்னு எழுதி வைக்கிறீங்கள, அத அப்படியே ஃபாலோ பண்ணுங்க. அப்புறம் பைக் டாக்சி மேல் கம்ப்ளைன்ட் கொடுங்கள்." என்று கூறியுள்ளார்.

    Advertisement

    மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், "6 கி.மீ பயணத்திற்கு ₹300 கேட்பதைவிட, முதலில் மீட்டருக்கு வண்டியை ஓட்டிப் பாருங்கள்! மீட்டருக்கு நியாயமான கட்டணத்தில் ஆட்டோ ஓட்டினால், மக்கள் ஆட்டோவைத் தேடி வருவார்கள். பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்; ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும்.

    ஆட்டோ கட்டணம்.. முதல் 1.5 கி.மீ.க்கு 60 முதல் 70 ரூபாய் கேட்கும் சங்கங்கள்.. அரசின் முடிவு என்ன

    வேண்டுமென்றால் மும்பை போன்ற நகரங்களைப் பாருங்கள். அங்கு மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் மக்கள் அடிக்கடி ஆட்டோவைப் பயன்படுத்துகிறார்கள். மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைவிட, நியாயமான கட்டணத்தில் அதிக பயணிகளைப் பெறுவது நல்லது. மீட்டருக்கு ஓட்டுங்கள் - மக்களுக்கும் பயன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயன்!" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    நான்காவது நெட்டிசன் , "தமிழ்நாடு மக்கள் இரண்டு பேருக்கு மட்டும் இரக்கம் காட்ட மாட்டார்கள். ஒன்று அரசு ஊழியர்கள். இன்னொன்று ஆட்டோ டிரைவர்கள். மீட்டருக்கு மேல் வாங்குவதுதான் இரண்டுக்கும் பொதுவான காரணம்" என்று வெறுப்பை காட்டியுள்ளார்.

    ஐந்தாவது நெட்டிசன் கூறுகையில், "எளியாரை வலியார் அடித்தால் வலியாரை பைக் டாக்ஸி அடிக்கிறான் 5 கிலோ மீட்டருக்கு 250 -300(ஒருவருக்கு மட்டும்)கேட்கும் ஆட்டோ காரர்களே பைக் டாக்ஸி 50-75 கேட்கிறார்கள் இதில் பொது மக்கள் சவுகரியம் தானே நீங்கள் சரசரியாக 100 ரூபாய் கேட்டால் கூட பரவாயில்லை ஆனால் கேட்பது 250-300 இது சரியா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement
    எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இனி பைக், ஆட்டோ ஓடாது.. பெங்களூர் டிராஃபிக் போலீஸ் கட்டுப்பாடு!

    ஆறாவது நெட்டிசன் கூறுகையில், "பெங்களூருல ஆட்டோ புக் பண்ணி பல தடவ போயிருக்கேன், ஒரு தடவ கூட எக்ஸ்ட்ரா 10 குடுங்கனு கேட்டதே இல்லை
    சென்னைல எப்போ ஆட்டோ புக் பண்ணாலும் எக்ஸ்ட்ரா 50 குடு, 100 குடுனு திமிரா பேசுற ஆட்டோ காரர்களுக்கு இரக்கமே கிடையாது" என்று காட்டமாக கூறியுள்ளார். இன்றும் சில நெட்டிசன்கள் ஆந்திராவில் 3 கிமீக்கு 50 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் சென்னையில் 250 ரூபாய் கேட்கிறார்கள். ஆட்டோவை எடுத்து ஒரு கிலோ மீட்டர் ஓட்டவே 120 முதல் 150 ரூபாய் கேட்பதாக பலர் குற்றம்சாட்டினார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் நியாயமான கட்டணம் வசூலிப்பதே இல்லை என்றும், ஒரு வேளை பைக் டாக்ஸிக்கு தடையே அரசு விதித்தாலும் ஆட்டோவில் பயணிக்க மாட்டோம் என்றும் பல நெடடிசன்கள் குமுறுகிறார்கள்.

    English Summary

    Auto-rickshaw drivers in Chennai have been continuously lodging complaints with traffic police and Transport Department officials against bike taxis. Netizens are harshly criticizing the auto drivers who have filed such complaints.