தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை

  • சென்னை: தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது நேரடியாக முழுநேர டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    Advertisement

    22 வயதில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக பணியாற்ற தொடங்கிவர்தான் மகேஷ்குமார் அகர்வால். தற்போது BSF அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அடுத்த ஓரிரு நாட்களில் மகேஷ்குமார் தமிழக டிஜிபியாக பொறுப்பேற்பார்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பு டிஜபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காரணம் இந்த நியமனம் முறைப்பட நடைபெறவில்லை என்பதுதான்.

    அதாவது, தற்போது பதவியில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே, தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு மத்திய பொதுச்சேவை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். UPSC-ன் தலைவர் அல்லது உறுப்பினர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு கூடும். இதில் மத்திய உள்துறைச் செயலாளர், மாநிலத் தலைமைச் செயலாளர், தற்போதைய டிஜிபி மற்றும் மத்திய ஆயுதப் போலீஸ் படையின் தலைவர் ஒருவர் இடம்பெறுவர். இக்குழு அதிகாரிகளின் பணிப் பதிவேடு மற்றும் அனுபவத்தை ஆய்வு செய்யும்.

    Advertisement

    அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்து, மிக முக்கியமாக சீனியாரிட்டி, மிகச்சிறந்த பணி வரலாறு மற்றும் விரிவான அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒட்டுமொத்தப் பட்டியலிலிருந்து 3 தகுதியான அதிகாரிகளை மட்டும் UPSC இறுதி செய்து மாநில அரசுக்குப் பரிந்துரைக்கும்.

    UPSC அனுப்பிய அந்த இறுதி 3 அதிகாரிகளின் பட்டியலிலிருந்து, ஏதேனும் ஒரு அதிகாரியை மாநில அரசு தனது விருப்பத்தின்படி மாநிலத்தின் புதிய டிஜிபியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கும்.

    இப்படி விதிமுறைகளின்படி வெங்கட்ராமன் நியமிக்கப்படவில்லை. எனவே பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து தேர்தல் தொடங்கியதால், புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்தது. இதனையடுத்து தற்போது புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

    English Summary

    The appointment of an Acting DGP during the previous DMK regime in Tamil Nadu had sparked considerable controversy. Against this backdrop, Mahesh Kumar Agarwal has now been appointed directly as the full-time DGP.