Low Pressure Area: வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை தான் டார்கெட்.. மழை வெளுக்க போகுது!

  • சென்னை: வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்று வரும் 17 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு நடுவே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புயலாக மாறுமா? என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியவரும்.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை எப்போது?

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வடகிழக்கு பருவமழையாவது தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமாக பொழியுமா என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    நைட்டு விட்டு விளாசப் போகுது மழை.. கோவை முதல் குமரி வரை 15 மாவட்டங்களுக்கு அலர்ட்

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஜனவரி 2 ஆம் வாரம் வரை நீடித்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நல்ல மழையை கொடுத்தது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 43 செமீ மழை பதிவானது. எல் நினோ பாதிப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தென்மேற்கு பருவமழையை போல வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Advertisement

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

    ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டாவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வடகிழக்கு பருவமழை கனமழையோடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் வரும் 17 ஆம் தேதி முதல் சென்னையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

    பேய் மழை வெளுக்க போகுது.. தமிழகத்தில் இன்று மெகா சம்பவம்! 16ஆம் தேதி வரை ஜில்ஜில் தான்! மெட் அப்டேட்
    Advertisement

    இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மலாக்கா ஜலசந்தி பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 13 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

    இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அப்படி வலுப்பெறும் பட்சத்தில் அடுத்தடுத்த நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயல் சின்னம் வரும் 17 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் வட கடலோர மாவட்டங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    New Low Pressure Area : The India Meteorological Department (IMD) has announced that a new low-pressure area is likely to form over the Bay of Bengal the day after tomorrow. Forecasts indicate that this system, developing over the southeast Bay of Bengal, will intensify over the coming days and is likely to make landfall between north Tamil Nadu and southern Andhra Pradesh on the 17th.