Low pressure area: இனி தான் சம்பவம் இருக்கு! அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதி கனமழை வெளுக்குமாம்!

  • சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும். இதனால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தாலும், பருவமழை தொடங்கிய முதல் நாளே தென் மாவட்டங்களில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து அடுத்த நாளிலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மூன்றாவது நாளான நேற்று சென்னையில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

    Advertisement

    இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே வானிலை மையம் கணித்து இருந்தது. இந்நிலையில் இன்று அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Red alert: சென்னைக்கு இன்று ”ரெட் அலர்ட்..” கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.. ஐஎம்டி

    "அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும். இதனால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரமடையும். குறிப்பாக அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும்." என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    New low pressure: The Meteorological Department has announced the formation of a new low-pressure area over the Arabian Sea. This system, which has developed in the southwestern Arabian Sea, is expected to intensify further over the next 24 hours. Consequently, the Meteorological Department has predicted heavy to extremely heavy rainfall across the Western Ghats region in Tamil Nadu.