சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்-2026 அமல்படுத்தப்பட்டிருக்கிறது.. ஜூலை 1 முதல் 2031-ம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் வகையில் அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ள இந்த திட்டப்படி, 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1,535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும்.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழக அரசுபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்த திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் 30.06.2025 வரையிலும், ஓய்வூதியர்களுக்கு 1.7.2022 முதல் 30.06.2026 வரையிலும் தொடர்ந்து 4 ஆண்டுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறும்வகையில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வந்தது. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். இந்த புதிய திட்டம் பற்றி பார்ப்போம். தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்-2026 அமல்படுத்தப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஜூலை 1 முதல் 2031-ம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் அரசு ஊழியர்கள் 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்று தெரிவித்துள்ளது அரசு. அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக கார்பஸ் நிதி மூலம் ரூ.15 லட்சம் வரை உதவி கிடைப்பதால், மொத்தம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. 1,535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்த ஊதியம் பெறுவோருக்கான பிரீமியத்தை அரசே ஏற்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.