தமிழக அரசு அலுவலகங்களில் புதிய கட்டுப்பாடு.. காலை 10 மணிக்கு முன் வராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா

  • சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் பணியாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என புதிய வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றின விவரத்தை இங்கே பார்ப்போம்.

    Advertisement

    தமிழகத்தில் நிர்வாக ரீதியான அதிரடி மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதில் முதலாவதாக, முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தனது செயல்பாடுகளை மிகவும் துரிதப்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக பள்ளிக்கல்வித்துறை

    முதல்வர் தினமும் காலை சரியாக 10 மணிக்குத் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து தனது பணிகளைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதைப் பின்பற்றி, அரசு நிர்வாகம் முழுவதிலும் ஒரு ஒழுக்கத்தை நிலைநாட்ட அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களின் வருகை மற்றும் பணி நேரம் குறித்த முக்கியமான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை தற்போது பிறப்பித்துள்ளது.

    குறிப்பாக காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என்ற உத்தரவு முக்கிய அம்சமாக பேசப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவேடு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என்றும், அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பாக அலுவலகத்தில் இருப்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசு ஊழியர்கள்

    பணிக்கு தாமதமாக வருவது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தை விட்டு புறப்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், விடுப்பு எடுக்கும் போது முன் அனுமதி அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விடுப்பு பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேர நிர்ணயம் தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.10 மணி வரை என ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசின் புதிய நடைமுறை வழிகாட்டுதல்கள்

    அதன்படி தலைமை ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், ஆசிரியர்கள் காலை 9 மணிக்குள் வருகை தர வேண்டும் என்றும் விதிகள் உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தலைமை ஆசிரியர்கள் காலை 9 மணிக்குள் வருகை தர வேண்டும் என்றும், உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்குள் வர வேண்டும் என்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

    அதுமட்டுமல்ல, பழைய நடைமுறை vs புதிய கட்டுப்பாடு முன்பு அரசு பணியாளர்களின் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது பணிக்கு நேரத்திற்கு வராத நிலை குறித்து புகார்கள் அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அரசு அலுவலகங்கள்

    இதன் அடிப்படையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேரக் கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும், விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் தங்கள் தினசரி பணிநேரத்தை கட்டுப்பாட்டுடன் பின்பற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    மேற்கண்ட இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் ஒழுங்கு மேலும் மேம்படும் என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள பணிச்சுமை மற்றும் பயண சிரமங்கள் காரணமாக இது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என இன்னொரு தரப்பினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.. அரசின் இந்த புதிய கட்டுப்பாடு எவ்வாறு நடைமுறையில் செயல்படுகிறது என்பதே தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

    English Summary

    New Restrictions in TN Govt Offices! What Happens If You Don’t Arrive Before 10 AM?