பிறப்பு, இறப்புச் சான்றிதழ்.. அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது.. மக்கள் அறிய வேண்டியவை

  • சென்னை: நாடாளுமன்றத்தில் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்யும் முறையைக் கடினமாக்கும் வகையில், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) சட்டம் கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் நாடு முழுவதும் அக்டோபர் 1-ந்தேதி அமலுக்கு வருகிறது. இதன்படி, 2 ஆண்டுகளுககு பிறகு தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்யவது இனி எளிதானது கிடையாது. மாவட்டத்தின் முதல் வகுப்பு நீதித்துறை மேஜிஸ்ட்ரேட் உத்தரவைப் பெற்றுத்தான் பதிவு செய்ய முடியும் . அதாவது நீதிமன்றத்தில் தான் வழக்கு போட்டு, இங்கு தான் பிறந்தார் என்பதை நிரூபித்தே இனி பிறப்பு சான்றிதழ் வாங்க முடியும். இறப்பு சான்றிதழும் அப்படித்தான் வாங்க முடியும்.

    Advertisement

    கடந்த 1969-ம் ஆண்டு நாட்டின் முதல் பிறப்பு-இறப்பு பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம், பிறப்பு, இறப்பை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டது. ஆனால் மக்களில் பலர் அதனை பின்பற்றவே இல்லை. போதிய கல்வி அறிவு இன்மை,ஏழ்மை போன்ற காரணங்கள் இருந்தன. அதேபோல் அரசும் பெரிய அளவில் இதனை கண்டுகொள்ளவில்லை.. ஆனால் 2000க்கு பிறகு எல்லாமே மாறியது. 2000க்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறினாலும், ஓரளவு நெகிழ்வுத்தன்மை இருந்தது. ஆனால் அந்த சட்டத்தில், 2023-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் தான் தற்போது அமலில் இருக்கிறது.

    Advertisement

    ஆனால் இந்த சட்டத்தை இன்னும் கடுமையாக்கி உள்ளது. பிறப்பு, இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்ய பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், தாமதமாக பதிவு செய்வதற்கான நடைமுறைகளை கடுமையாக்கும் நோக்கத்திலும் பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தின் 13(3)-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது.

    அதாவது பிறப்பு மற்றும் இறப்பை காலதாமதமாகச் செய்யப்படும் பதிவுகளுக்கான விதிமுறைகளை மிகவும் கடுமையானதாக மாற்றுவதன் மூலம், பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளைப் பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்வதைத் தவிர்த்து, உரிய காலத்தில் உடனடியாகப் பதிவு செய்வதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் கடந்த மாதம் சட்டமானது.

    Advertisement

    இந்நிலையில், பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம், 2026 அக்டோபர் 1-ந்தேதி அமலுக்கு வருகிறது. இந்திய பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், அரசிதழ் அறிவிப்பாணையில் இத்தகவலை கூறியுள்ளார்.

    இந்தச் சட்டத்தின்படி ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஓராண்டுக்கு மேல் காலதாமதமானால், அது 13 மாதங்களாக இருந்தாலும் சரி அல்லது 13 ஆண்டுகளாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அல்லது அதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்ய முடியும். அதாவது, நிகழ்வு நடந்து 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய விண்ணப்பித்தால், பழைய நடைமுறையே தொடரும்.

    Advertisement

    ஆனால், பிறப்பு அல்லது இறப்பு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலுவையில் உள்ள பதிவுகளுக்குத் தான் மிகக் கடுமையான மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இனி இத்தகைய பதிவுகளுக்கு 'முதல் வகுப்பு நீதித்துறை நடுவர்' மட்டுமே விசாரணை நடத்தி உத்தரவிட முடியும். இதன் மூலம், மிகக் தாமதமான பதிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் நிர்வாக அமைப்பிடமிருந்து நீதித்துறை அதிகாரியின் கைக்கு மாறி உள்ளது.

    இதில் பிறப்பு சான்றிதழ் கூட மருத்துவ ஆவணங்களை வைத்து வாங்கி விட முடியும்.ஆனால் இறப்பு சான்றிதழ் வாங்குவது எளிதானது இல்லை. மிகமிக சவாலாக மாறும். எனவே இறப்பை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் பெறுங்கள். இல்லாவிட்டால், சொத்து மாற்றம், காப்பீடு, பட்டா பெயர் மாற்றம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம், மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் என பல விஷயங்களில் சிக்கல் ஏற்படும். கட்டாயம் பிறப்பு இறப்பை 20 நாட்களுக்குள் பதிவு செய்வதே எளிதானது. கடந்த சில ஆண்டுகளாக இறப்பு சான்றிதழ் வாங்காதவர்கள் அல்லது பிறப்பு சான்றிதழ் வாங்காதவர்கள், உடனே சப் கலெக்டரிடம் விண்ணப்பித்து வாங்கிவிடுங்கள். இல்லாவிட்டால் அக்டோபர் 1 முதல் நீதிமன்றம் சென்று தான் வாங்க வேண்டியதிருக்கும்.

    English Summary

    The Registration of Births and Deaths (Amendment) Act, which tightens the procedure for registering births and deaths after a significant lapse of time, was passed in Parliament last July. This Act comes into effect nationwide on October 1st. Consequently, registering births or deaths with a delay of more than two years will no longer be an easy process.