புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும்

  • சென்னை: ரூ.1,200 கோடி செலவில் சென்னயில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டும் என்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார். தலைமை செயலகம் அமைக்க தமிழக அரசு மூன்று இடங்களை தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடங்களில் தலைமை செயலகம் அமைக்க சாத்தியம் உள்ளதா? அதில் இருக்கும் சவால்கள் என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    நூறாண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாட்டின் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. சட்டசபைக் கூட்டமும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் நடைபெற்று வருகிறது.

    Advertisement

    புதிய தலைமை செயலகம்

    போதிய இடவசதி இல்லாதது, துறைகளுக்கான அலுவலகங்களுக்கான நெருக்கடி போன்ற காரணங்களால் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்துள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது 2001 - 2026 ஆட்சி காலத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க திட்டமிட்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அவரால் கட்ட முடியாமல் போனது. அதேபோல, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஓமந்தூரார் பகுதியில் தலைமை செயலகம் கட்டி முடிக்கப்பட்டு 2010-ல் ஒரு கூட்டத்தொடர் அங்கு நடத்தவும் பட்டது. ஆட்சி மாறிய பிறகு ஜெயலலிதா மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே தலைமை செயலகத்தை மாற்றினார்.

    Advertisement

    சாதக, பாதகங்கள் என்ன?

    அதன்பிறகு தற்போது வரை தலைமை செயலகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் நடைபெற்று வரும் நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான முயற்சியில் தவெக அரசு இறங்கியுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று சட்டசபையில் விஜய் அறிவித்தார். புதிய தலைமை செயலகம் அமைப்பதற்காக மூன்று இடங்களை அடையாளம் கண்டு இருப்பதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள போர் ஷோர் எஸ்டேட், கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம் (HRS), நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு இடம் ஆகியவை பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மூன்று இடங்களிலும் சாதக பாதகங்கள் உள்ளன. அவை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

    Advertisement

    கிண்டி:

    கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையத்தை எடுத்துக்கொண்டால், கிண்டி மக்கள் மாளிகையின் எதிரே அமைந்துள்ளது. சர்தார் படேல் சாலையில் இருந்து எளிதாக இதை அணுக முடியும். சொல்லப்போனால் ஜெயலலிதா கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த இடத்தையே தேர்வு செய்து அடிக்கல் நாட்டவும் செய்தார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டது.

    43 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகம், காந்தி மண்டபம் சாலை முதல் சர்தார் படேல் சாலை வரை நீள்கிறது. இதில் உள்ள ஒரே சிக்கல் என்னவென்றால், இந்த வளாகத்திற்கு அருகிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கே பயின்று வருகிறார்கள். எனவே, தலைமை செயலகம் அமைக்கும் முன்பாக இதனையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

    Advertisement

    பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம்:

    பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் மற்றும் நந்தம்பாக்கம் ஆகியவற்றை பொறுத்தவரை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி வளாகத்தை போல அகலமான சாலைகளை கொண்டு இருக்காவிட்டாலும், எளிதில் அணுக கூடிய பகுதியில்தான் உள்ளன.

    ஃபோர்ஷோர் எஸ்டேட்டை பொறுத்தவரை சென்னையின் மிக முக்கிய இடங்களான அடையாறு மற்றும் மயிலாப்பூருக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனால், இந்த இரு இடங்களுமே, நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக உள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பகுதியாகவும் உள்ளது.

    English Summary

    New Secretariat: Chief Minister Vijay has announced in the Legislative Assembly that a new Secretariat will be constructed in Chennai at a cost of ₹1,200 crore. Reports indicate that the Tamil Nadu government has shortlisted three potential sites for the new Secretariat. Here, we examine the feasibility of establishing the Secretariat at these locations and the challenges involved.