சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது இடைத்தேர்தல் டென்ஷனிலும், அடுத்தடுத்த கட்சித் தாவல்களாலும் பரபரப்பாக காணப்படுகிறது.. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போன்ற முக்கிய முகங்கள் வெளியேறுவது குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் அதிரடியான பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள நக்கீரன் பிரகாஷ் அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது குறித்து பேசியிருக்கிறார்.
"அதிமுக என்பது ஒரு பல்சக்கரம் போன்றது. அதில் ஒரு பல் உடைவதால் சக்கரம் சுழல்வது நின்றுவிடாது. அதன் கட்டமைப்பு உடையாத வரை கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலேயே ஓ.பி.எஸ், சசிகலா போன்ற பெரிய முகங்களையே தூக்கி எறிந்த பாரம்பரியமிக்க கட்சி இது. விஜயபாஸ்கர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் இருப்பதால், தமிழக அரசு போட்ட 4 வழக்குகள் உள்ளன.. தமிழகத்தில் அதிக வழக்குகளை எதிர்கொண்டனர்.. அதை எதிர்கொள்ளவே அவர் தற்போதைய அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளார்.. எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில், அரசியல் அனுபவமற்ற தனது மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார். வாரிசு அரசியலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அதிமுகவில், இந்த வாரிசு ஆதிக்கம் கட்சியை முற்றிலும் அழித்துவிடும். மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியேறியதற்கும் மிதுனின் ஆதிக்கமே காரணம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடிகர் விஜயுடன் மிதுன் நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்ததுதான், விஜய் இப்போது எடப்பாடியை ஏடாகூடமாக எதிர்ப்பதற்குக் காரணம். எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மற்றும் எஸ்பி வேலுமணியின் மகன் ஆகியோர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக விஐபி ஒருவருடன் சொகுசு பாரில் ரகசிய சந்திப்பு நடத்தி திமுக-அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையை துவங்கியதாக கிசுகிசு பரவியது.. இப்போது ஐடி விங் பதவியையும் மிதுன் கைப்பற்ற முயல்வது உட்கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயபாஸ்கரை தொடர்ந்து அடுத்ததாக அதிமுகவிலிருந்து வெளியேறப்போகும் மிக முக்கியமான நபர் ஆவார்.. அவர் ஏற்கனவே திமுக தரப்புடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் திமுக தலைமை கருத்து கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.. சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் வெளியேற வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகப் பேசப்பட்டாலும், அவர்கள் திமுக தரப்புடனும் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இதில், சி.வி. சண்முகத்தை கட்சியில் இணைப்பது குறித்து அமைச்சர் பொன்முடியிடமும், விஜயபாஸ்கர் குறித்து புதுக்கோட்டை ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோரிடமும் திமுக தலைமை கருத்து கேட்டுள்ளது. அவர்கள் இருவரும் திமுகவிற்குள் வருவதற்கு பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் திமுக வட்டாரத் செய்திகள் கூறுகின்றன" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவி
விழுமா அதிமுகவில் அடுத்த விக்கெட்?