அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக

  • சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட நகர்வுகளும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும் இப்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கும், ஆளுங்கட்சியான தவெகவுக்கும் இடையே சி.வி.சண்முகம் சந்திக்கவிருக்கும் அரசியல் மாற்றங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், அவருக்கு ஒரு முக்கிய பதவி வழங்கப்பட பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இப்படியொரு சீக்ரெட் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது

    Advertisement

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களை கொண்ட ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்களை கொண்ட மற்றொரு அணியும் உருவானது.

    Advertisement

    சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேலுமணி அணி ஆதரவு அளித்த நிலையில், அந்த அணியை சி.வி.சண்முகமே முன்னின்று வழிநடத்தினார்.

    வேலுமணி டீம் 25 பேர்

    இதன் காரணமாக, வேலுமணி தரப்பிற்குத் தவெக அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தவெக கூட்டணிக்கு வந்த காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் வேலுமணி அணியில் குழப்பம் ஏற்பட்டு, அந்த அணியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    வாரிய தலைவர் பதவி

    அவர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட உள்ள சூழலில், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் சிலர் மீண்டும் பழனிசாமி அணியுடன் சமரசம் செய்து கொண்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகிய 2 பேர் மட்டுமே ஒதுங்கி நிற்கிறார்கள்.

    காரணம், எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் நெருங்கி செயல்பட முயன்றதாகவும், தவெக தங்களை கூட்டணிக்கு அழைத்தபோது அதனை அவர் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் சி.வி.சண்முகம் தரப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்.. அத்துடன் மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 30-க்கும் மேற்பட்டோரின் ஆதரவுடன் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    Advertisement

    தவெகவில் சிவி சண்முகம்?

    ஆனால், சி.வி.சண்முகத்தின் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி அதிமுக தலைமை வற்புறுத்தியது உள்ளிட்ட விவகாரங்களே இந்த மோதலுக்கும் அரசியல் விலகல் நகர்வுகளுக்கும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டு வருகிறது.

    மற்றொருபக்கம் சி.வி.சண்முகத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ஒன்றாகச் சேர்ந்து ராஜினாமா செய்வோம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் அதிரடியாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்தும் மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

    முக்கிய பதவி தருகிறதா விஜய் அரசு

    இப்படிப்பட்ட சூழலில், சிவி சண்முகம் விரைவில் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரத்து வருகின்றன.. மேலும் ஒரு முக்கிய பதவி சிவி சண்முகத்துக்கு கிடைக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

    Advertisement

    ஆம், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்திற்குத் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை வழங்குவது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சி.வி.சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் அவருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தரப்படும் எனத் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    டெல்லி பாஜக

    தமிழக அரசியலில் நீண்ட நிர்வாக அனுபவமும், டெல்லியில் பாஜக் உள்ளிட்ட தேசியத் தலைவர்களுடன் நல்ல அரசியல் தொடர்புகளும் கொண்ட சி.வி.சண்முகத்திற்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியைத் தருவது, டெல்லியுடனான உறவை வலுப்படுத்த நினைக்கும் தவெக தலைமைக்கு ஒரு சாதகமான நகர்வாகவே இருக்கும்;

    Advertisement

    ஆனால், கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் தவெகவின் உள்வட்டார அதிருப்திகளுக்கு இடையே இந்தப் பதவி வழங்கப்படுமா என்பது இப்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஒருவேளை இந்தப் பதவி வழங்கப்பட்டு சிவி சண்முகம் தவெக பக்கம் இணைந்தால், வடதமிழகத்தில் தவெகவிற்கு ஒரு வலுவான வாக்கு வங்கியும், சமுதாய ஆதரவும் கொண்ட மூத்த தலைவர் கிடைப்பார்,. அத்துடன் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் விழுப்புரம் மண்டலத்தில் அக்கட்சியை பலவீனப்படுத்தவும் முடியும்.. ஆனால், உள்ளூர் அதிமுக தொண்டர்களின் கடுமையான எதிர்ப்பை மீறி அவரால் தவெகவிற்குப் பெரிய அளவில் பலன் சேர்க்க முடியுமா தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    Next Wicket in AIADMK? Is CV Shanmugam Getting a Golden ‘Laddoo Chance’? TVK Launches Fresh Attack Strategy