25-ந்தேதி முதல் செப்டம்பர் 6 வரை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ரயில் சேவைகளில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படியே சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த ஓராண்டாகவே நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற ஆகஸ்ட் 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால் தெற்கு ரயில்வே அறிவித்திருந்த தேதியை சற்றே மாற்றி உள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளது.

    Advertisement

    வருகிற ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்களை பாருங்கள். சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதிநேர ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயிலும், தாம்பரத்திலிருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு தாம்பரம் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    English Summary

    Southern Railway has announced that night-time electric trains between Chennai Beach and Tambaram will be cancelled from the 25th of this month to September 6th.