கர்நாடகாவிடம் இருந்து காவிரியை பெற! இந்த 4 ஆப்ஷன்தான் இருக்கு! நிர்மல் குமார் லிஸ்ட்!

  • சென்னை: காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவில் இருந்து நீரை பெற 4 ஆப்ஷன்கள்தான் இருக்கின்றன என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகா காவிரி விவகாரத்தில் 30, 40 ஆண்டுகளாகவே அரசியல் செய்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் அவர்கள் அரசியல் அடங்கியிருக்கிறது.

    Advertisement

    மேகதாது பிரச்சினை விவகாரத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த பிரச்சினையில் தெளிவாக உள்ளோம். காவிரியில் இருந்து கர்நாடகா தண்ணீர் திறக்காதது குறித்து ஓரிரு நாளில் சரியான முடிவெடுக்கப்படும்.

    இந்த காவிரி விவகாரத்தில் என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு போக வேண்டும். அடுத்தது ஆணையத்தை கொண்டு வருவது, கர்நாடகாவிடம் எப்படி பேசி தண்ணீர் வாங்குவது, இவை அல்லாமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகிய 4 ஆப்ஷன்கள்தான் மேகதாது அணை பிரச்சினையில் இருக்கிறது.

    Advertisement

    தமிழக மக்களுக்கு எதிராக செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இப்படி செய்கிறதா என தெரியவில்லை? மேகதாது விவகாரத்தில் முதல்வர் தரப்பில் இருந்து ஒரு வாரத்திற்குள் தேவையான முடிவுகள் அறிவிக்கப்படும்.

    அதிமுக மேகதாது அணை விவகாரத்தில் ஏன் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது என தெரியவில்லை. மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப்பில் தவறாக வந்த தகவலின் அடிப்படையில் மக்களை குழப்பும் விதமாக ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    ஸ்டாலின் செல்லும் கணக்கீடுகள் தவறானவை. சமூகவலைதளங்களில் அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வழக்கமான ஆய்வு தான் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Nirmal Kumar explains about TVK government stand in Cauvery river and Meketadu Dam issue.