நிர்மல் குமார் டோனை கவனிச்சீங்களா! மிசா வேறு, குண்டாஸ் வேறு தெரியுமா? விஜயையும் சாடியது யார் பாருங்க

  • சென்னை: முதலமைச்சர் விஜய்யை அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்க பயமா? "ஆதாரம் வேணும், ஆதாரம் வேணும்" என்று கேட்டவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், "போதுமா? நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்" என்று வசனம் பேசுகிறார் விஜய்.. அமைச்சர் நிர்மல் குமாருக்கு மிசா வேறு, குண்டாஸ் என்பது வேறு என்றே தெரியவில்லை. அவர் பேசும் டோன் பாஜக, ஆர்எஸ்எஸ் டோன்" என்று காரசாரமான விமர்சனத்தை வைத்துள்ளார் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்.

    Advertisement

    செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், "தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு சட்டமன்றத்தை திரைப்பட அரங்கமாக மாற்றிய பெருமை இந்த தவெக அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இதை வருத்தத்தோடு ஜனநாயக நாட்டில் பதிவு செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

    Advertisement

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பிய 15 கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தை விட்டு ஓடிவிட்டார். 13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையிலும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பதில் அளிப்பதே மரபு.

    உங்களுடைய கட்சிக்காரர்கள் ஓட ஓட சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றி கூட தன்னிலை விளக்கம் சொல்ல முடியாத முதலமைச்சராக இருக்கிறார். மிசாவைப் பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? மிசா பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கும் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் எந்த தகுதியும் இல்லை.

    Advertisement

    மிசா என்றால் என்ன

    மிசாவில் பெண்கள் தொடர்பான வழக்குகளில் இருப்பவர்களையும் கைது செய்வார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார். மிசா என்றால் என்ன தெரியுமா? Maintenance of Internal Security Act என்பது உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். இந்திரா காந்தி எமர்ஜென்சி அறிவித்தபோது அரசியல் தலைவர்கள் மிசாவில் கைது செய்யப்பட்டார்கள். அதை எவ்வளவு கொச்சையாக பேசுகிறார்.

    மிசா கைதிகளாக இருந்து துன்புறுத்தப்பட்டவர்களின் தாக்குதல் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையில் அனைத்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. யார் யார் கைது செய்யப்பட்டார்கள், யார் குற்றவாளிகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், என்.வி.என். சோமு, என்.வி.என். செல்வம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    சர்க்காரியா கமிஷனில் போடப்பட்ட குற்றச்சாட்டுகள்

    ஓராண்டு காலம் மு.க.ஸ்டாலின் மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்தார். ஒரு முதலமைச்சருடைய மகனான அவருக்கு சல்யூட் அடித்த போலீஸ்காரர்கள் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தனர். சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தார். அதனால் ஏற்பட்ட காயங்கள் இன்று தழும்பாக அவரது உடலில் உள்ளது. இந்த வரலாறு யாருக்காவது உள்ளதா? சினிமாவுக்கு டிக்கெட் விற்றவர்கள் எல்லாம் இன்று சட்டசபையில் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    சர்க்காரியா கமிஷனில் போடப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று எம்.ஜி.ஆரே பின்வாங்கிவிட்டார். ஆனால் மிசா குறித்து பேசுகின்றனர். மிசா கைதிகள் அனுபவித்த கொடுமைகள் குறித்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் பற்றி இவர்களுக்கு தெரியுமா?

    Advertisement

    நிர்மல்குமார் மீது பாய்ந்த பரந்தாமன்

    ஸ்ரீவைகுண்டத்தில் தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்திருக்கிறார். வேதாரண்யத்தில் உங்களுடைய ஒன்றிய செயலாளர் கஞ்சா கடத்தி படகில் இலங்கைக்கு அனுப்புகிறார். இதற்கு பதில் அளிக்க உங்களால் முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமாருக்கு மிசா வேறு, குண்டாஸ் என்பது வேறு என்றே தெரியவில்லை. அவர் பேசும் டோன் பாஜக, ஆர்எஸ்எஸ் டோன்.

    மேலும், முதலமைச்சர் விஜய்யை அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்க பயமா? "ஆதாரம் வேணும், ஆதாரம் வேணும்" என்று கேட்டவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், "போதுமா? நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்" என்று வசனம் பேசுகிறார்" என்றெல்லாம் பரந்தாமன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    English Summary

    Paranthaman Hits Back at Nirmal Kumar Over MISA Remarks.. Questions Vijay on MISA and Goondas Act