அண்டா நிறைய மனித சதை.. நிஷா தலை எங்கே? சென்னை கூடுவாஞ்சேரி கொலைக்குப் பின்னால் இப்படியொரு காரணமா?

  • சென்னை: சென்னை கூடுவாஞ்சேரி பிரியாணி அண்டா நிஷா கொலையில் புது புது தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. "உறவை துண்டித்துக் கொள்ள ஒத்துக்கொள்ளாத ஹயாத் நிஷா எங்களை மிரட்டியதால்தான், ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டி கொன்றோம்" என்று பகீரை கிளப்பியிருக்கிறார் லஸ்கர்.. கைதான 2 பேரிடமும் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    ஆகஸ்ட் 5ம் தேதி ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் அன்ரிசர்வ்டு பெட்டியில் கிடந்த சூட்கேஸில் மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    உடற்பாகங்கள் சென்னையை சேர்ந்த துணிக்கடை கவரில் சுற்றப்பட்டிருந்ததால், ரயில்வே போலீஸார் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆண், பெண் 2 பேர் சூட்கேஸை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    கூடுவாஞ்சேரி பெண் கொலை

    விசாரணையில், கூடுவாஞ்சேரி வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுகளாக்கப்பட்டதும், உடற்பாகங்கள் பிரியாணி பாத்திரத்தில் சமைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலை செய்யப்பட்டவர் ஹைத்துல் நிஷா என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவருடன் தங்கியிருந்த மாணிக் உத்தீன் லஸ்கர் (22), பகமதி மாஜி (20) ஆகியோர் தலைமறைவானார்கள். கடந்த ஒரு வாரமாக அசாம், ஒடிசா, மணிப்பூர் என மாறி மாறித் தலைமறைவாகி வந்துள்ளனர். மணிப்பூரில் கலவரம் நடைபெற்ற காடு மற்றும் பள்ளத்தாக்குப் பகுதியில், வாகனங்கள் செல்ல முடியாத இடத்திற்கு இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சென்று தனிப்படை போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

    Advertisement

    நேற்று அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.. கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் 2 பேரிடமும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பமானது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை சூட்கேஸ் நிஷா

    அதாவது, தாம்பரம் அருகே மெப்ஸ் பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் கைதான கணவன் மனைவியும், கொலையான நிஷா என்ற பெண்ணும் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். அப்போது நிஷாவுக்கும் அஸ்கருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பிறகு இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.

    இந்தத் தகாத உறவின் காரணமாக நிஷா கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அவர் அஸ்கரிடம் தெரிவித்தபோது, தனக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளதாகவும், தனக்கென மனைவி மற்றும் குடும்பம் உள்ளதால் கருவைக் கலைத்துவிடுமாறும் அஸ்கர் சொல்லியுள்ளார்.

    Advertisement

    ஆனால் அதற்கு நிஷா மறுப்பு தெரிவித்துவிட்டு, தன்னையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் குடும்பத்தினரிடம் சொல்லி அசிங்கப்படுத்துவேன் என்றும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

    அண்டாவில் ரத்தம்

    இந்தத் தகவல் அஸ்கரின் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அஸ்கர் தனது மனைவியிடம், தான் அவருக்கு மட்டும்தான் உரிமையானவன் என்பதை நிரூபிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

    பிறகு நிஷாவைத் தனது வீட்டிற்கு வரவழைத்த அஸ்கர், கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்தை வெட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த அண்டாவில் நிஷாவின் ரத்தத்தைப் பிடித்துள்ளனர். உடலின் சதைப்பகுதிகளைத் துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் போட்டு வேகவைத்துள்ளனர்.. நிஷாவின் தலைப்பகுதியையும் துண்டு துண்டாக வெட்டி பாத்திரத்தில் போட்டார்களாம்.

    Advertisement

    நிஷா தலை எங்கே

    இதுகுறித்து ராகுல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: "நான் எனது மனைவி பகவதிமாஜியுடன் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்தேன். அப்போது ஹயாத் நிஷாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து சென்றார். இருவரும் நெருங்கி பழகியது எனது மனைவி பகவதி மாஜிக்கு பிடிக்கவில்லை. அவர் என்னையும், ஹயாத் நிஷாவையும் கண்டித்தார். இதனால் நான் ஹயாத் நிஷாவுடனான தொடர்பை துண்டித்து விட முடிவு செய்தேன்.

    இதுபற்றி அவரிடம் நேரடியாகவே தெரிவித்தேன். அதற்கு ஒத்துக்கொள்ளாத ஹயாத் நிஷா எங்களை மிரட்டினார். இது இருவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் ஹயாத் நிஷாவை கொலை செய்ய திட்டமிட்டோம்.

    Advertisement

    பிரியாணி அண்டா

    சம்பவத்தன்று எங்களது வீட்டில் வைத்து ஹயாத் நிஷாவுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது கடுமையான வார்த்தைகளால் அவர் திட்டியதால் ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டி கொன்றோம். கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் உடலை வைத்து ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தோம். இந்த கொலை தொடர்பாக எதுவும் வெளியில் தெரியாது, தப்பித்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தோம்" என்று தெரிவித்துள்ளார்..

    இதையடுத்து, கொலையுண்ட பெண்ணின் உடல் சதை பகுதியை பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில் போட்டு சமைக்கப்பட்டதா? மைதா மாவு ஏன் அந்த பாத்திரத்தில் இருந்தது? மனித சதையை நாய்க்கு போடுவதற்காக கொண்டு சென்றார்களா? தலை எங்கே? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொண்டிரக்கிறார்கள்.. கூடுவாஞ்சேரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது...!

    English Summary

    Nisha Murder in Guduvanchery.. Human Flesh Found in Vessel, Where Is Her Head? Shocking Reason Revealed