ஐயா எங்க தலைவர் சக்தி வேற மாதிரி.. தனுஷ்க்கு வாய்ப்பே இல்ல.. சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ

  • சென்னை: தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு திராவிட இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருந்தன. இரு பெரும் திராவிட கட்சிகளை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரின் தனுஷ் இன்று தன் நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை சந்திக்கிறார். இதுகுறித்து சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ இ.சி.ஆர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "தமிழகத்திலேயே பெரிய தொகுதி. இந்த தொகுதியில் ஆரம்பத்தில் வெற்றி பெறலாம் என்று தனுஷ் நினைக்கலாம். இதையே தான் உதயநிதியும் சொன்னார். தமிழகத்தில் எங்கு வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, சோழிங்கநல்லூரில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். இதற்காக இந்த பகுதியில் கூட்டமெல்லாம் நடத்தினார்கள். கடைசியில் வெற்றி பெற்றது தவெக தான். தனுஷ் இந்த பகுதிக்கு வந்துள்ளார். மகளிரணி கூட்டம் நடத்துகிறார்.

    Advertisement

    அவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வரவேற்கிறேன். தவெக தலைவர் திரையுலகத்தில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்துவிட்டார். ஐந்து வயதில் இருந்து 60 வயதிருப்போருக்கு அரசியல் கற்று கொடுத்து கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் அரசியல் ஆர்வம் புரிகிறது. சட்டமன்றம் கூடினால் அந்த லைவை பார்ப்பதற்கு மக்கள் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த சக்தி மற்ற நடிகர்களுக்கு கண்டிப்பாக இருக்காது.

    விரைவில் எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். எங்கள் தலைவரை நம்பி பல கட்சிகளில் இருந்து மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைகிறார்கள். மக்களிடம் எங்கள் தலைவருக்குள்ள நம்பிக்கை வேறு யாருக்கும் இல்லை. எங்கள் ஆட்சி மீது வைத்து மாற்றுக் கட்சியினர் வருவதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆண்ட கட்சிகளில் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு, இங்கே அங்கீகாரம் கிடைக்குமா என்கிற தயக்கம் இருக்கலாம்.

    Advertisement
    அமித்ஷாவின் ஆபரேஷன் D.. புதிய நடிகரை வைத்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி! தனுஷை சாடிய மாணிக்கம் தாகூர்

    யாரும், எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். முக்கியமான பொறுப்புகளில் இருந்து வந்தவர்களுக்கு நிச்சயம் பொறுப்பு வழங்கப்படும். அனைவரும் இணைந்து, தவெகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடி கொடுப்போம். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் தலைவரின் எண்ணம். எதிர்பார்ப்பு இல்லாமல் கட்சியில் உழைத்தவர்கள் தான் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியுள்ளனர். அதேபோல அனைவருக்கும் அங்கீகாரம் கிடைக்கும்" என்றார்.

    English Summary

    TVK Sholinganallur MLA ECR Saravanan said, Vijay having strong power. No actor including Dhanush has that power.