சேகர்பாபு மீது கோபம் இல்லை, வருத்தம்.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • சென்னை: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கோபம் இல்லை. வருத்தம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சேகர் பாபு மீது வருத்தம் மட்டும் இல்லை. அவர் மீதும் இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கக்கூடிய உரிமை என அவர் கூறினார்.

    Advertisement

    மேலும் தேர்தலில் எதிரி யார் என்று தெரியாமல் சண்டை போட்டுவிட்டோம். இன்னைக்கு யார் எதிரி என்று தெரிந்துவிட்டது. இதனால் மீண்டும் அந்த தவறை நம்ம செய்ய மாட்டோம்.. என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    Advertisement

    தேர்தலில் யார் எதிரி என்று தெரியாமல்..

    எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- இன்றைக்கு ஆளும் கட்சியாக வந்திருக்கக் கூடியவர்கள் எப்படி இந்த நிலைமைக்கு வந்தார்கள் என்று நாம் நினைத்து பார்க்க வேண்டும். தேர்தலில் நாம எதிர்பார்த்தது மிகப்பெரிய வெற்றி.. மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி வரும் என ஒரு நம்பிக்கையோடு இருந்தோம்.

    ஆனால் என்ன பண்ணிட்டோம்.. தேர்தலில் எதிரி யார் என்று தெரியாமல் சண்டை போட்டுவிட்டோம். இன்னைக்கு யார் எதிரி என்று தெரிந்துவிட்டது. இதனால் மீண்டும் அந்த தவறை நம்ம செய்ய மாட்டோம்.. செய்ய மாட்டீங்க என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த கிழக்கு மாவட்டத்தில் மாதம் ஒரு நிகழ்ச்சியில் நான் வந்து கலந்துகொண்டு இருக்கிறேன்.

    Advertisement

    சேகர் பாபு மீது வருத்தம்

    ஆனால் ஒரு சிறிய இடைவேளை.. 4 மாதங்களுக்கு பிறகு இந்த சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்து இருக்கிறேன். சேகர்பாபு அவர்கள் நினைத்து இருக்கலாம். நான் அவர் மீது கோபத்தில் இருக்கிறேன். அதனால் நான் வரலை என்று கூட அவர் நினைத்து இருக்கலாம். அது கோபம் இல்லை. வருத்தம். வருத்தம் மட்டும் இல்லை. அவர் மீதும் இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கக்கூடிய உரிமை.

    எத்தனையோ காரணங்களை நாம் சொல்லலாம். வெற்றி வாய்ப்பை நாம் இழந்ததற்கான காரணங்களை நாம் தேடி கண்டுபிடித்துவிடலாம். சினிமா மாயை.. கவர்ச்சி.. இளம் தலைமுறையினர் சோஷியல் மீடியாக்களில் முழுக்க முழுக்க கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நம் தலைவர் அவர்களின் சாதனைகள் எல்லாம் இளம் தலைமுறையினர் இடையே போய் சேரலை என எத்தனையோ காரணங்களை நாம் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம்.

    Advertisement

    கொளத்தூர் தோல்வியை ஏற்க முடியுமா?

    இருந்தாலும் கொளத்தூர் தொகுதி தோல்வியை ஏற்க முடியுமா? இது நமக்கு ஒரு பெரிய பாடம். 108 இடங்களில் தவெக வென்றது. நம் தயவில் தான் அவர்கள் ஆட்சியில் உள்ளார்கள். மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம் தான் செய்கிறார்கள். திமுக மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்த தோல்வியை எல்லாம் பார்த்து பயப்படாது" என்று கூறினார்.

    English Summary

    Opposition Leader Udhayanidhi Stalin stated that he holds no anger towards former Minister Sekar Babu, but rather feels a sense of disappointment. He remarked that his feelings go beyond mere disappointment, encompassing the sense of entitlement he holds regarding both Sekar Babu and this district.