ஒரு வாரத்திற்கு சிக்கன் கிடைக்காது! இறைச்சி கோழி விற்பனையாளர்கள் முடிவால் சிக்கலில் தமிழகம்!

  • சென்னை: கோழி இறைச்சி என்பது மலிவான விலையில் கிடைக்கும் புரதமாகும். இப்படி இருக்கையில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த வணிகர்கள் முடிவெடுத்திருக்கின்றனர்.

    Advertisement

    தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த முடிவால் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு சிக்கன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    ஏன் விற்பனை நிறுத்தம்?

    கோழி விற்பனையாளர்களுக்கு, இறைச்சியில் பல சிக்கல்கள் இருக்கிறது. அதாவது, கோழியை வெட்டும்போது அதன் குடல் சுத்தமாக இருந்தால்தான் இறைச்சியும் தூய்மையாக இருக்கும். கோழியின் குடலில் சால்மொனெல்லா, ஈகோலை போன்ற மோசமான பாக்டீரியாக்கள் இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் குடலிலிருந்து வெளியேற வேண்டும் எனில், சில மணி நேரத்திற்கு தீவனம் கொடுக்காமல் கேப் கொடுக்க வேண்டும். எனவேதான் 15 மணி நேரத்திற்கு இடைவெளி கொடுக்க வேண்டும் என்று இறைச்சி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த இடைவெளியில் கோழியின் குடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும். இதனால், இறைச்சியை வெட்டும்போது எந்த பிரச்சனையும் இருக்காது.

    Advertisement

    அதேபோல, கோழிகளை தீவனம் கொடுத்து வண்டியில் ஏற்றும்போது.. அது பயணத்தில் மூச்சு திணறி உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல எடையை கூட்டி காட்டவும் இந்த யுக்தியை கோழி பண்ணையாளர்கள் கையாளுகின்றனர்.

    எனவே கோழியை இறைச்சிக்கு கொடுப்பதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பு தீவனம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒருவேளை இது கடைப்பிடிக்கப்படவில்லை எனில், ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனையை நிறுத்துவோம் என்றும் கூறி, செயற்குழு கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர்.

    English Summary

    Chicken is an affordable source of protein. Despite this, traders have decided to halt chicken sales for a week. A resolution to this effect was passed at the state executive committee meeting of the Tamil Nadu Chicken Traders Federation held in Thanjavur.