கம்யூனிஸ்ட்டுகளுக்கு மரணமும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. இடைத்தேர்தல் முடிவு பற்றி வீரபாண்டியன்

  • சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி ஏற்கனவே தெரிந்து ஒன்றுதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைத்தது மாசில்லாத வாக்குகள் என்று கூறிய வீரபாண்டியன், கம்யூனிஸ்ட்டுகளுக்கு மரணமும் கிடையாது, தோல்வியும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக முன்னிலையில் இருக்கிறது. அதேபோல் இரு தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான திமுக 2வது இடத்திலும், அதிமுக 3வது இடத்திலும் இருக்கின்றன. இந்த இடைத்தேர்தலில் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளும் போட்டியிட்டன.

    Advertisement

    மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் கட்சியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் களமிறங்கின. இரு கட்சிகளின் வேட்பாளர்களுமே டெபாசிட் இழந்திருக்கின்றனர். மதுராந்தகம் தொகுதியில் 1,376 வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 1,099 வாக்குகளும் பெற்றுள்ளன. இதனால் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்துப் போட்டியிட்டு தங்களின் பலத்தை அறிய முடிவு செய்துள்ளதாக கூறி இருந்தனர். ஆனால் இடைத்தேர்தலில் அடைந்துள்ள தோல்வி, கம்யூனிஸ்ட்டுகள் மீண்டும் தனித்து போட்டியிடக் கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது. அதேபோல் தவெகவினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தோல்வியை கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.

    Advertisement
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தடுமாறும் திமுக! வெறிச்சோடிய அண்ணா அறிவாலயம்

    இப்படி தோல்வி அடைவதற்கு தங்களுடன் கூட்டணிக்கு வந்துவிடலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை தவெகவினர் நக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இடைத்தேர்தல் முடிவு என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

    கம்யூனிஸ்ட்டுகளை சட்டசபை எண்ணிக்கையில் யாரும் தேட வேண்டாம். கம்யூனிஸ்ட்டுகளுக்கு மரணமும் கிடையாது, தோல்வியும் கிடையாது. எங்கள் கட்சிக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் மாசில்லா வாக்குகள் என்று தெரிவித்துள்ளார். இதனால் கம்யூனிஸ்ட்டுகள் விரைவில் தவெக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    No Defeat or Death for Communists, CPI Veerapandian Downplays Dharapuram & Madurantakam Bypoll Loss