தொகுதி மறுவரையறையே கூடாது.. விஜய் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் பேசியது என்ன? திருமாவளவன் பேட்டி

  • சென்னை: தொகுதி மறுவரையை கைவிட வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக திருமாவளவன் கூறினார். அனைத்து எம்பிக்களும் ஒரே குரலில் பேசினோம். எம்பிக்கள் எண்ணிக்கை 543 ஆகவே தொடர வேண்டும் என முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திருமாவளவன் பேட்டியளித்தார்.

    Advertisement

    தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவானர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நடந்த கூட்டத்தில் 19 எம்பிக்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பிக்கள் என மொத்தம் 19 எம்பிக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    Advertisement

    திமுக, அதிமுக, தேமுதிக, மநீம, பாமக என மொத்தம் 37 எம்பிக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்பியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சென்னை கலைவானர் அரங்கில் இரண்டரை மணி நேரமாக நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன, என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    ப. சிதம்பரமும் இந்தகூட்டத்தில் பங்கேற்றார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் சார்பாக பேசினோம். நிறைவாக முதல்வர் பேசினார். ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறையை கைவிட வேண்டும். இப்போதுள்ள எண்ணிக்கை 543 என்பது தொடர வேண்டும்.

    Advertisement

    இந்த ஒரே கருத்து கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 50 சதவீதம் அனைத்து மாநிலங்களுக்கும் உயர்த்தலாம் என்ற எண்ணமோ, மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்துவது கூடாது என்பதுதான் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம். அனைத்து எம்பிக்களும் இந்த அடிப்படையில் கருத்துகளை முன்வைத்தோம். என்று கூறினார்.

    English Summary

    Thirumavalavan stated that a resolution was unanimously passed calling for the abandonment of the delimitation process. "All the MPs spoke with one voice," he said. Thirumavalavan made these remarks after participating in a meeting chaired by Chief Minister Vijay, where the consensus was that the number of MPs should remain at 543.