தனி ஒருவன் வெடிச்சு வரான்! தவெக பாடலுக்கு 10 லட்சம் வழங்கப்பட்டதா? ஐகோர்ட்டில் விஜய் தரப்பு விளக்கம்

  • சென்னை: முதல்வரும், தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, பெரம்பூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏவான ஆர்டி சேகர் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த முதல்வர் விஜய், "தனி ஒருவன் வெடிச்சு வரான்.. விசிலு ஒன்னு அடிச்சி வாரான்' என்ற தவெக பாடலுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். விஜய்யின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்டி சேகர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக பாடல்

    இந்த மனுவுக்கு ஆதரவாக கூடுதல் பிரமாணப்பத்திரம் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரமாணப்பத்திரத்தில், தவெக பிரசார பாடலுக்கு 10 லட்சம் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தவெக தேர்தல் பிரசாரத்தின் போது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடலாக விளங்கிய 'தனி ஒருவன் வெடிச்சி வருவான், விசிலு ஒன்னு அடிச்சி வர்றான்' பாடலுக்கு இசை அமைத்த தமனுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டதாக மனுதாரர் (ஆர்டி சேகர்) கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஆனால், தமனுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக ஆர்.டி. சேகர் உறுதியாக தெரிவிக்கவில்லை. தமன் என்று அறியப்படும் இசையமைப்பாளர் கண்டசாலா சாய் சீனிவாஸ், அந்த பாடலுக்காக ரூ.10 லட்சம் கட்டணம் வசூலித்திருக்கக் கூடும் என்று "நம்பகமான தகவலின் அடிப்படையில் அறிந்ததாக" மட்டுமே கூறியிருக்கிறார்.

    எவ்வளவு தொகை கொடுத்தார்?

    எனவே, தமனுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுமையாக ஊகத்தின் அடிப்படையிலானது. ரூ.10 லட்சம் செலவு செய்யப்பட்டதை நிரூபிக்க எந்த ஒரு ஒப்பந்தத்தையோ, ரசீது என எந்த ஒரு பரிவர்த்தனை ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே வெற்றிக்கு எதிராக தொடர்ந்த ஆர்டி சேகர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல வேட்பாளர் செலவு செய்ய நிரணயிக்கப்பட்டு இருக்கும் 40 லட்சம் வரம்பை மீறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த ஒரு ஆதாரத்தையும் தேர்தல் மனுவில் குறிப்பிடவில்லை. வெறும் அனுமானத்தின் அடிப்படையிலே குற்றச்சாட்டு உள்ளது. பலவற்றிற்கு அடிப்படை சான்றுகளே இல்லை. தேர்தல் பிரசாரத்திற்கு வெளிநாட்டு நிதி வந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக வெளிநாட்டு நிதி அளித்தவர் யார் என்றோ? எவ்வளவு தொகை கொடுத்தார்? என்றோ குறிப்பிடப்படவில்லை.

    ஆதாரமாக கருத முடியாது

    இந்தியாவுக்கு வெளியில் வசிக்கும் ஒருவர் சமூக வலைதள கணக்கு செயல்படுத்துவது மட்டுமே, வெளிநாட்டு நிதி பெறப்பட்டதற்கான ஆதாரமாக கருத முடியாது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் 1,20,365 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து பெரம்பூரில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்டி சேகர் 66,650 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 53,715 வாக்குகள் வித்தியாசத்தி விஜய் பெற்றார்.

    Advertisement

    திருச்சி கிழக்கு தொகுதியிலும் வெற்றி பெற்ற விஜய், அந்த தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பெரம்பூர் தொகுதியை மட்டும் தக்க வைத்துகொண்டார். விஜய் ராஜினாமா செய்து இருப்பதால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது.

    English Summary

    RT Sekar, the former DMK MLA for the Perambur constituency, had filed an election petition seeking to declare the victory of TVK leader Vijay in that constituency as invalid. In his counter-affidavit filed regarding this case, Vijay clarified to the High Court that there is no evidence to support the claim that ₹10 lakh was paid for the TVK song featuring the lyrics, "Thani Oruvan Vedichu Varan... Visilu Onnu Adichi Varan" (A lone man is bursting onto the scene... arriving to the sound of whistles).