“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி

  • சென்னை: "தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தவெக கட்சியினர், பல்வேறு விவகாரங்களில் சிக்கி வருகின்றனர். ஆலந்தூரில் தவெக நிர்வாகி, தனியாக வசிக்கும் பெண்ணிடம் அத்துமீற முயன்ற விவகாரம், மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரை தவெக நிர்வாகி பட்டாக் கத்தியால் வெட்டிய விவகாரம் ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    மேலும், சேலம் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர், பெண்களுக்கு உதவுவது போல நாடகமாடி, அவர்களுடன் பழகி, வீடியோ எடுத்து, மிரட்டி வருவதாகவும், 50க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்தது.

    இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    Advertisement

    50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.

    இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும்போது சொன்ன "எல்லாரும் நல்லா இருப்போம்" என்பது இதுதானா? தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்? உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.

    Advertisement

    தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்? மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Why do they have no fear regarding the fact that their party leader is the Chief Minister, or about the police force under his control?” asked AIADMK General Secretary Edappadi Palaniswami.