“தேசிய கீதத்தை 2 முறை பாடியதில் தவறு இல்லை.. நமக்கு எந்த பாதிப்பும் இல்லை”: அமைச்சர் நிர்மல்குமார்

  • சென்னை: "தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி மிகவும் அமைதியாக சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் வலியுறுத்தலால் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதத்தை இருமுறை பாடியதில் எந்த தவறும் இல்லை." என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டத்தொடர் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கியது. இந்த கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார். ஆளுநர் உரையை வாசித்து முடித்த பின் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது.

    Advertisement

    2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய கீதம், நிகழ்வின் இறுதியில் பாடப்படுவது மரபாக இருந்து வந்த சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ஒரு முறை, முடிவில் ஒரு முறை என தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது விமர்சனங்களைக் கிளப்பிவிட்டது.

    சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "திமுகவினரின் தூண்டுதலின் பேரில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறது. எங்கு மின்வெட்டு ஏற்பட்டாலும் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்படுகிறது. அடுத்த வாரம் மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

    Advertisement

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி மிகவும் அமைதியாக சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் வலியுறுத்தலால் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதத்தை இருமுறை பாடியதில் எந்த தவறும் இல்லை. அதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "பாஜக - திமுக இடையேதான் நெருக்கமான உறவு இருக்கிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் ஆளுநர் நடவடிக்கை இல்லை. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரிய கோப்புகள் கையெழுத்தாகவில்லை. தனிப்பட்ட பிரச்சனைகளால் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    முதலமைச்சர் வாய் திறப்பதில்லை என்று உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையின் விதிகள் குறித்து தொிந்துகொண்டு எதிா்கட்சித் தலைவா் உதயநிதி பேச வேண்டும். ஆளுநா் உரைக்கு பதிலளிக்கும் நாளில் முதலமைச்சா் பேசுவாா். குற்றச் சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசு எப்படி கையாளுகிறது எனப் பார்க்க வேண்டும்.

    நடவடிக்கை எடுக்கும் வழிமுறையில் ஏதாவது தவறு சொல்ல முடியுமா? முன்பு அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சம்பவங்களில் என்ன நடந்தது? நீதிமன்றமே தலையிட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "The Assembly session proceeded very peacefully, beginning with the Tamil Thai Vazhthu. The National Anthem was sung twice at the insistence of the Central Government. There is nothing wrong with singing the National Anthem twice," stated Minister CTR Nirmal Kumar.