சென்னை: தமிழக அரசியலில் தினமும் ஒரு பரபரப்பு தீயாய் பற்றிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் கடத்தல், மின் வெட்டு, கொலைகள் என்று தமிழ்நாட்டின் நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தொடர் சொதப்பல்கள் காரணமாக.. முதல்வர் விஜய் தலைமையிலான அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றன.
அந்த வரிசையில் உருவான கடுமையான கிண்டல் விமர்சனம்தான், "இன்று தமிழகத்தில் எந்தக் கைதியும் ஜெயிலில் இருந்து தப்பவில்லை; இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கரண்டும் போகவில்லை.. என்பது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கு முக்கிய காரணம், அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து சிறைக் கைதிகள் தப்பியோடிய விவகாரம்தான். கோவையில் சிறை வளாகத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து திருச்சி, சேலம், நெல்லை எனப் பல பகுதிகளில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், காவல் நிலையங்களில் காவலில் வைக்கப்பட்டபோதும் கைதிகள் அடுத்தடுத்து தப்பித்ததாகச் செய்திகள் வெளியாகி மக்களை அதிர வைத்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை புழல் மத்திய சிறையில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு கைதிகள் தப்பியோடியது நாட்டையே உலுக்கியது. ஆனால் அதிர்ச்சி அடங்குவதற்குள், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெக்கம்பட்டி சிறையில் ஒரே இரவில் 17 கைதிகள் தப்பியோடியது நிர்வாகத்தின் மெத்தனத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. தினமும் காலையில் பேப்பரைத் திறந்தாலே "இன்று இந்த ஊரில் கைதி தப்பினார்" என்ற செய்தி வருவது சின்னத்திரை மெகா சீரியல் போல் ஆகிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகவே அரசை வறுத்தெடுத்தனர். காவல்துறையின் பாதுகாப்பு பலவீனமாகிவிட்டதா, நிர்வாகக் கட்டுப்பாடு நழுவுகிறதா என்ற கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன. கைதிகள் விவகாரம் ஒருபுறமிருக்க, மின்வெட்டுப் பிரச்சினை இன்னொரு புறம் பூதாகரமாக வெடித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முக்கியப் பிரமுகர்கள் வந்தபோதெல்லாம் மின்வெட்டு ஏற்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது, சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கருவறைப் பகுதியில் இருள் சூழ்ந்ததால், "இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாகக் கோவிலுக்கு வந்து சாமி கூட கும்பிட முடியவில்லை;.. தமிழகத்தில் மின்வெட்டு இருக்கிறது என்பதற்கு மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட மின்தடையே நேரடி சாட்சி" என்று எடப்பாடி பழனிசாமி கோவிலை விட்டு வெளியே வந்ததும் மிகக் காட்டமாகப் பேசினார். இஅதேபோல் விஐபி வருகைகள் மற்றும் துணை ஜனாதிபதி வருகையின் போதும் கோவில் வளாகத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச வழிபாட்டுத் தலத்திலேயே விஐபிகள் வரும்போது கரண்ட் போனால், சாதாரண கிராமங்களின் நிலைமை என்ன என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஊரில் கைதி தப்புவதும், இன்னொரு பக்கம் முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்ட சூழலில், "இன்று நவம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி யாரும் தப்பவில்லை.. மீனாட்சியம்மன் கோவிலிலும் கரண்ட் போகவில்லை" என்று எதிர்க்கட்சிகளும் சமூக வலைதள நெட்டிசன்களும் அரசை எள்ளி நகையாடும் நிலைக்குத் தள்ளியுள்ளனர். "இன்றைக்கு அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் போனதே அரசுக்கு பெரிய சாதனை" என்ற பாணியில் இந்த விமர்சனம் தவெக விஜய் அரசைச் சுற்றிச் சுழல்கிறது. சிறைத் துறைப் பாதுகாப்பு குளறுபடிகளும், மின்வாரியத்தின் நிர்வாகக் குறைபாடுகளும் உடனடியாக சரிசெய்யப்படாவிட்டால், வரும் நாட்களில் மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. தவெக அரசு இந்த விமர்சனங்களுக்கு வெறும் அறிக்கைகளால் பதில் சொல்லாமல், நிர்வாக ரீதியாகக் களத்தில் இறங்கி முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அதிர்ச்சி தந்த தொடர் கைதிகள் தப்பியோட்டம்
Theni: தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியது எப்படி? மூளையாக செயல்பட்டது யார்? எஸ்பி விஷ்ணு பிரியா பேட்டி
மீனாட்சியம்மன் கோவிலில் அடுத்தடுத்து மின்தடை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்த போது மின் தடை ஏன்? நிர்மல் குமார் விளக்கம்
இன்று ஒரு நிம்மதி பெருமூச்சு!