நானே சொன்னாலும் சட்டத்தை பின்பற்றுங்க.. அதுதான் முக்கியம்! ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விஜய் ஆர்டர்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் கடந்த இரண்டு நாட்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் முதல்வர் விஜய் முக்கியமான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க உரையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை குறித்து முதல்வர் விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

    Advertisement

    விஜய் பேசுவது இல்லை என்று புகார்

    விஜய் பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பெரிதாக பேசுவது இல்லை என்று புகார் உள்ளது. அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பொதுவாக ஸ்டாலின், ஜெயலலிதா இருந்தால் கேள்வி கேட்பார்கள். எடப்பாடி பழனிசாமி கூட கேள்வி கேட்பார். ஆனால் விஜய் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது இல்லை என்று புகார் உள்ளது.

    அதாவது ஏதாவது ஒரு விஷயம் சொன்னால் அது தொடர்புடைய மற்ற விஷயங்களை விஜய் கேள்வியாக எழுப்புவது இல்லை. ஸ்டாலின், ஜெயலலிதா இருந்தால் இதை கேட்பார்கள். இந்த புகார் நீண்ட நாட்களாகவே விஜய் மீது இருந்தது. தற்போது இந்த புகார்களை விஜய் திருத்தி உள்ளாராம்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் கடந்த இரண்டு நாட்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். இதில்தான் விஜய் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    விஜய் சந்திப்பு

    "சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் முடிவுகளை எடுக்கலாம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தட்டாமல் நடவடிக்கை எடுங்கள். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை, நானே சொன்னாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்" என்று முதல்வர் விஜய் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    மீட்டிங்கில் நடந்தது என்ன?

    மாநாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், காவல் துறையினருக்கு மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கினார். "பொதுமக்கள் காவல் நிலையத்தை அணுகும்போது புகார்களைப் பதிவு செய்வதிலோ அல்லது எப்.ஐ.ஆர் (FIR) போடுவதிலோ எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவிடுவதில் ஏற்படும் தாமதத்தை இந்த அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது" என்று எச்சரித்தார்.

    Advertisement

    அதே சமயம் ஐஏஎஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு பணிய கூடாது. அழுத்தம் வந்தால் என்னிடம் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளாராம்.

    மேலும், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் அல்லது புகார்களை நிர்வாகத் தரப்பு மறைக்கவோ அல்லது அதிகாரிகளுக்கு அனுப்பத் தாமதிக்கவோ கூடாது என்றும், இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

    English Summary

    No matter What, Even if it's me, follow the law says TN CM Vijay to IAS, IPS officers