சென்னை: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, தவெகவுக்கு அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்படியெனில் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்று கேள்விகள் எழுந்திருந்தன. இது குறித்து திருமாவளவன் கொடுத்துள்ள விளக்கம் கவனம் பெற்றிருக்கிறது.
தவெக பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக ஆதரவு தெரிவித்திருந்தன. இப்படி இருக்கையில், சட்டமன்றத்தில் ஆதரவு கொடுத்த அதிமுகவின் ஒரு பிரிவுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டதால், ஆதரவு கொடுத்த இடதுசாரிகள், விசிக அதிருப்தி தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், "ஏற்கெனவே 2-3 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்திக்கும்போது, அதிமுகவின் ஒரு பிரிவை வரவேற்ககூடிய வகையில்.. அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்கம் கொடுத்திருந்தேன். அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டால், எங்கள் ஆதவு நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்வேன் என்று 2-3 நாட்களுக்கு முன்னரே தெரிவித்துவிட்டேன். எனவே அமைச்சரவையில் அதிமுகவினருக்கு இடம் இல்லை என்று தவெக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என கூறியிருக்கிறார்.