விஜய் vs விஜய் சேதுபதி! ஒரு வசனத்திற்காக இவ்வளவு சீரியஸ் ரியாக்டா? சப்போர்ட்டுக்கு வந்த சீனு ராமசாமி

  • சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமை பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கள் விவாதமாக வெடித்திருக்கின்றன. இந்நிலையில், ஒரு வசனத்திற்காக இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.

    Advertisement

    உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை. பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.

    ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    Advertisement

    இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது. புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.

    முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

    Advertisement

    விஜய் சேதுபதி பேசியது என்ன?

    வார இறுதி எபிசோடில் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக இருந்த போட்டியாளர் ஷாதிகாவிடம்? "யோசிக்காமல் எதையாவது வாக்குறுதிகளாக கொடுத்துவிட்டு, பின்னர் பிரச்சனைகளும் பொறுப்புகளும் வரும்போது.. எதிர்த்தரப்பு மீது பழியை போட்டுவிட்டு ஓடி ஒளிவது தலைமைத்துவம் அல்ல. அது ஏமாற்று வேலை" என்று பேசியிருந்தார். மேலும் அதிகாரத்தை குறிக்கும் நாற்காலி பற்றி பேசிய அவர், "எல்லா வீடுகளிலும் நாற்காலிகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில நாற்காலிகளில் அமரும்போது அது அதிகாரத்தை தருகிறது. அந்த அதிகாரம் மனிதர்களுக்கு ஒருவித போதையை தரக்கூடியது" என்றும் கூறியிருந்தார்.

    Advertisement

    பிக் பாஸ் வீட்டின் கேப்டன்ஷிப் விளையாட்டு மற்றும் அங்குள்ள ஜனநாயக அறை சூழலை மனதில் வைத்தே இந்த கருத்துக்களை பேசினார். இருப்பினும் அவர் தனது பேச்சில் எந்த ஒரு அரசியல் தலைவரையோ, அல்லது கட்சியின் பெயரையோ குறிப்பிடவில்லை. இருப்பினும் முதலமைச்சர் விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் விஜய் சேதுபதியின் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay Sethupathi: Comments made by actor Vijay Sethupathi regarding leadership qualities on the *Bigg Boss* show have sparked a debate. Amidst this, director Seenu Ramasamy has spoken in support of Vijay Sethupathi, stating that there is no need to react so seriously to a single line of dialogue.