சென்னை: "தமிழ்நாட்டில் எந்தப் பைத்தியக்காரனும் திரிஷா விஜய் என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க மாட்டார்கள். குறிப்பாக திமுகவினர் வாங்க மாட்டார்கள். இந்த புத்தகம் விஜயின் பிறந்தநாள் அன்று சீலிடப்பட்டுள்ளது" என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின் போது கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடி செலவில், பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரமாண்ட நுாலகம் கட்டும் பணி துவங்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின், பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி, முதல்வர் ஜோசப் விஜய், பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு நுால்கள் வாங்கியிருப்பதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
போலியான பெயர்களில், முழுக்க முழுக்க தவறான தகவல்களுடன் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 300 ரூபாய் கூட மதிப்பில்லாத புத்தகங்களை 1,500 ரூபாய் - 2,000 ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. போலி நூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த முறைகேடு திமுக ஆட்சியில் நடைபெற்றது என தவெக தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. அதேசமயம், தவெக ஆட்சிக்கு வந்தபிறகுதான், குறிப்பிட்ட நூல்கள் நூலகத்துக்கு வாங்கப்பட்டுள்ளன என்றும், அகல் விளக்கு பதிப்பக புத்தகத்தில் புத்தகம் நூலகத்திற்கு வந்த தேதி ஜூன் 22 என இருப்பதாகவும், முழுமையாக விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் திமுக குற்றம்சாட்டுகிறது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பரந்தாமன் பேசுகையில், "பெரியார் அறிவுலகம் திமுகவால் கட்டப்பட்டது என்பது நாட்டு மக்களுக்கு நல்லாவே தெரியும். மு.க.ஸ்டாலின் சென்று பெரியார் அறிவுலகத்தை பார்த்துவிட்டு வந்த பிறகு அதற்கு கிடைத்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஃபேக் நரேட்டிவ் செட் பண்றாங்க. திமுக மீது பழிபோட வேண்டும். ஸ்டாண்ட்-அப் காமெடியன் அமைச்சர் ராஜ்மோகனை கேட்கிறேன். தைரியம் இருந்தால், அகல் விளக்கு பதிப்பகத்துக்கு எப்போது பணப் பரிவர்த்தனை நடந்தது என்பதை வெளியிடத் தயாரா? ஒரு நூலின் ஆசிரியர் பெயர் திரிஷா விஜய். தமிழ்நாட்டில் எந்தவொரு பைத்தியக்காரணும் திரிஷா விஜய் என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க மாட்டார்கள். குறிப்பாக திமுகவினர் வாங்க மாட்டார்கள். இது ஒன்று போதாதா? இதை திமுக செய்யவில்லை என்பதறு.. இந்த புத்தகம் விஜய்யின் பிறந்தநாள் அன்று சீலிடப்பட்டுள்ளது. தவறான புத்தகங்கள் இருக்கிறது எனத் தெரிந்தும் இன்னும் அவற்றை திரும்பப் பெற உத்தரவு போடவில்லை. அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து யார் கொள்முதல் செய்தது? எப்போது கொள்முதல் செய்யப்பட்டது? எப்போது பணப் பரிவர்த்தனை நடைபெற்றது என்ற விவரங்களை ஏன் இன்னும் வெளியிடவில்லை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே! வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!
கரன்சி ஊழலில் புழுத்த திமுகவின் கருத்து ஊழல்.. கோவை பெரியார் நூலக மோசடி குறித்து பாஜக சூர்யா ஆவேசம்