சென்னை: கடந்த கால திமுக ஆட்சியையும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினையும், மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்த பிரச்சாரத்தில் முதலமைச்சர் என்பவர் மக்களின் வேலைக்காரன் என்று விஜய் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
அவர் மேலும் பேசியதாவது, "நான் முதலமைச்சராக பல இடங்களில் ஆய்வுக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு பாலத்தின் மீது நின்று ஆய்வு செய்திருந்தேன். ஆனால், நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று விஜய் சூட்டிங் எடுக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
இல்ல எனக்கு புரியல.. நீங்க கட்டின பாலம்னா.. சொந்த காசு போட்டு கட்டுனீங்களா சார்? அப்படி கட்டினீர்கள் என்றால்.. செக் எங்கிருந்து போனது? கோபலபுரத்திலிருந்தா? பாவம் உங்ககிட்டயே வெறும் ரூ.10,000 தான் இருக்கிறது. சொந்தமாக கார் கூட இல்லையே! ரூ.10,000 கூட இல்லாமல் பாலம் எப்படி சார் கட்டினீர்கள்? இதெல்லாம் நீங்கள் கொடுத்த தகவல்கள்தானே சார்? இந்த தகவல்களை எல்லாம் பார்க்கும்போது.. செலவுக்கு பணமில்லாத பரம ஏழையாக இருக்கிறீர்களே! ஓ கணக்கில் வராத பண்தை வைத்து கட்டுனீர்களா? இதையெல்லாம் நாங்கள் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள். முதலமைச்சர் என்பவர் மக்களின் சர்வென்ட். வேலைக்காரன். மக்களின் முதலாளி கிடையாது. ஆனால், நீங்களும் உங்கள் குடும்பமும் பேசுவதை பார்த்தால்.. என்னவோ தமிழ்நாட்டுக்கே நீங்களும் உங்க குடும்பமும்தான் முதலாளி மாதிரி பேசுகிறீர்கள்! தேர்தலுக்கு முன்னாடி கணக்கு போட்டீர்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இப்போது குறுக்கு வழியில் வந்து ஆட்சியமைக்க முயற்சிக்கிறீர்கள். இதெல்லாம் ஒன்னுத்துக்கும் உதவாத மனக்கணக்கு" என்று கூறியிருக்கிறார்.