உசிலம்பட்டி இல்லை மதுரையில்.. தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நடைபெறும் இடம் மாற்றம்

  • சென்னை: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெற இருந்த நிலையில் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. முதல்வர் விஜய் வரும் 28 ஆம் தேதி மதுரையில் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.

    Advertisement

    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப் போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய்யின் வெளிநாட்டு பயணத் திட்டத்தால் செப்டர்ம்பர் 15-இல் தாய் மாமன் தங்க மோதிரம் தொடங்கப்படாது எனவும், இந்த திட்டம் தொடங்கி வைப்பது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தினை முதல்வர் விஜய் வரும் 28 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

    முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் செல்றதால் இந்த திட்டம் தொடங்கி வைக்கும் திட்டம் 15 ஆம் தேதிக்கு பதிலாக 28 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    Advertisement

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வந்தன. அங்கு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுவதற்காக மோதிரங்களும் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. உசிலம்பட்டி பகுதிகளில் தாய்மாமன் சீர் வழங்கும் பாரம்பரியம் நீண்ட காலமாக இருப்பதால் விஜய் இந்த திட்டத்தினை உசிலம்பட்டியில் தொடங்கி வைக்கிறார் என தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் முதல்வர் விஜய் உசிலம்பட்டியில் தொடங்கி வைக்கவில்லை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைத்து தான் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரென இடம் மாற்றப்பட்டுள்ளது.

    Topics: #Arunraj #vijay

    English Summary

    Thai Maman Thanga Mothiram scheme: Reports indicate a change in the venue for the launch ceremony of the 'Thai Maman Thanga Mothiram' (Maternal Uncle's Gold Ring) scheme. While the event was originally scheduled to take place at the Usilampatti Government Hospital, it will now be held at the Madurai Rajaji Government Hospital. Chief Minister Vijay will inaugurate the scheme in Madurai on the 28th of this month.