விஜய்யின் ஈகோவை தவிர வேற ஒன்னுமில்ல.. கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் பிளான்! வெடிக்கும் விமர்சனம்

  • சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெறும் ஈகோ அடிப்படையிலானதுதான் என்றும், இப்படி அறிவித்திருப்பதால் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மட்டுமே மகிழ்ச்சியடைவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருக்கின்றனர்.

    Advertisement

    தமிழ்நாடு 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு என்று கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு தொழில்துறை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் மிக முக்கியமான திட்டம்தான் இந்த பரந்தூர் விமான நிலைய திட்டம். தற்போது இந்த திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்திருப்பது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    முதலமைச்சரின் அறிவிப்பு

    சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சி.ஜோசப் விஜய், "சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். விவசாயிகளே நான்டின் முதுகெலும்பு. விவசாய நிலங்களை பாதுகாக்க மக்கள் போராடி வருகிறார்கள். அதன்படி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் கைவிடப்படும். புதிய விமான நிலைய திட்டத்திற்கான நிலம் விரைவில் தேர்வு செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    தமிழக வளர்ச்சி பாதிப்பு

    சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் 2028-2032க்குள் தன் முழு கொள்ளவை எட்டிவிடும். எனவே நிச்சயமாக இன்னொரு விமான நிலையம் அவசியமாக இருக்கிறது. சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள மின்னணு நிறுவனங்களில்.. வாகன உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் விமான நிலையம் அமைத்தால்.. நிச்சயம் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும்.

    வேகம் காட்டும் பக்கத்து மாநிலங்கள்

    புதிய விமான நிலையம் என்பது ஏற்றுமதிக்கு மட்டுமல்லாது புதிய மூலதன முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பயன்படும். முதலீடுகள் குவிந்தால் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். தற்போது கர்நடாகவும், ஆந்திராவும் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதில் வேகம் காட்டி வருகின்றன. இந்த நேரத்தில் தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விமான நிலைய திட்டத்தை நிறுத்துவது சரியாக இருக்காது என்பதே பலரின் விமர்சனம்.

    Advertisement

    திட்டத்தில் கால தாமதம்

    மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அறிவித்திருந்தாலும், சரியான மாற்று இடத்தை தேடி கண்டுபிடித்து, அதை இறுதி செய்து கட்டுமானத்தை தொடங்கி.. விமான நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். இது கர்நாடகா, ஆந்திராவுக்குதான் பாசிட்டிவாக அமையும்.

    கர்நாடகாவின் வளர்ச்சி

    கர்நாடகாவை பொறுத்தவரை, அதன் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் ஏற்கெனவே நாட்டின் 2வது பரபரப்பான உள்நாட்டு விமான நிலையமாக இருக்கிறது. தற்போது தென் பெங்களூரில் 9000 ஏக்கரில் 2வது விமான நிலையத்தை அமைக்கும் வேலைகளை அம்மாநில அரசு வேகப்படுத்தியிருக்கிறது. சென்னையில் வான்வழி போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது எனில்.. செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய கிளைகளையும் முதலீடுகளையும் பெங்களூரை நோக்கி திருப்பும்.

    Advertisement

    ஓசூரில் அமைய இருந்த வான்வழி போக்குவரத்து தாமதங்களை சாதகமாக்கிக்கொண்டு.. ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி வணிக போக்குவத்தை பெங்களூர் தன்வசப்படுத்திக்கொள்ளும்.

    ஆந்திராவின் ஆதிக்கம்

    சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள ஆட்டோமொபைல், மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் அவசரக் கால சர்வதேச சரக்குக் கையாளுதலுக்காக சென்னைக்கு மாற்றாக ஆந்திராவின் உள்கட்டமைப்பை நாடலாம். சென்னை-பெங்களூர் தொழில்துறை வழித்தடத்தில் அமைந்துள்ள ஆந்திராவின் ஸ்ரீசிட்டி மற்றும் நெல்லூர் போன்ற பகுதிகள், நிறுவனங்களுக்கு மலிவான நிலங்களையும் வான்வழி உள்கட்டமைப்பையும் வழங்கி.. புதிய தொழிற்சாலைகளை தங்கள் பக்கம் இழக்க முயற்சிக்கும்.

    English Summary

    Vijay: Chief Minister Vijay announced in the Legislative Assembly today that the Parandur airport project is being abandoned. Various quarters have criticized this announcement, stating that it is driven purely by ego and that the only ones likely to be pleased by it are Karnataka Chief Minister D.K. Shivakumar and Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu.