Seeman: அம்பையில் களமிறங்கும் சீமான்! இதுவரை போட்டியிட்ட தொகுதிகள் எதெல்லாம்? எத்தனை முறை டெபாசிட் இழந்தார்?

  • சென்னை: வரும் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுவரை எத்தனை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்?.. எந்தெந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளார்? எவ்வளவு வாக்குகள் பெற்றார் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் வென்று அவைக்குள் சென்றுவிட வேண்டும் என வெறியோடு இருக்கிறேன் என தனது ஸ்டைலில் கூறிய சீமான், அம்பாசமுத்திரத்தில் நான் பொது வேட்பாளராக களமிறங்குவதாக சொல்வது ஏற்புடையது அல்ல.

    Advertisement

    இடைத்தேர்தலுக்கு வெறியோடு இருக்கிறேன்

    அம்பாசமுத்திரத்தில் மட்டுமல்ல, எப்போதுமே நான் பொது வேட்பாளர்தான். எல்லா சமூகத்துக்கும், எல்லா மதத்துக்கும், எல்லா உயிர்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் பொது வேட்பாளர் நான்தான்" என்று கூறியுள்ளார். சீமான் போட்டி என அறிவித்து இருப்பதால், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளரான சீமான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுதியான காரைக்குடியில் களமிறங்கினார். இதில் படுதோல்வியே சீமானுக்கு கிடைத்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், 2011 ஆம் ஆண்டு அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    Advertisement

    சீமான் இதுவரை போட்டியிட்ட தொகுதிகள்

    அதன்பிறகு 2016 முதல் 2026 வரை நடைபெற்ற 3 சட்டமன்ற தேர்தல்களிலும் களமிறங்கியுள்ளார். இதில் சீமான் பெற்ற வாக்குகள் எவ்வளவு? எத்தனை முறை டெபாசிட்டை பறிகொடுத்தார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

    தொடர் தோல்வி.. அம்பையில் அசத்துவாரா சீமான்? கடந்த தேர்தல் ரிசல்ட்டை பாருங்க!

    நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து சீமான் தனது கொள்கைகளில் எந்த சமரசமும் இன்றி விடாப்பிடியாய் பயணித்து வருகிறார். அந்த வகையில், தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்து சீமான் ஒருபோதும் பின் வாங்கியது இல்லை. அடுத்தடுத்து தோல்வி வந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் சீமான் 2016 தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார்.

    Advertisement

    கடலூரில் போட்டியிட்டு 5 ஆம் இடம் பிடித்தார்

    கடலூர் சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிட்ட நிலையில், அந்த தொகுதியில் வெறும் 12,497 வாக்குகள் மட்டுமே பெற்றார். 5-வது இடத்தை பிடித்த சீமான் டெபாசிட்டையும் பறிகொடுத்தார். கடலூர் தொகுதியில் எம்.சி சம்பத் (அதிமுக) வெற்றி பெற்றார். திமுக இரண்டாம் இடத்தையும், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகிய வேட்பாளர்களை விட குறைவான வாக்குகள் பெற்ற சீமான், 5 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    திருவொற்றியூர் தொகுதியில் டெப்பாசிட் வாங்கினார்

    2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கினார். இந்த தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கேபி சங்கர் 88,185 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பாக போட்டியிட்ட குப்பன் 50,524 வாக்குகள் பெற்று 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாம் இடத்திற்கு சென்ற சீமான் 48,597 வாக்குகள் பெற்றார். 24.3 சதவீத வாக்குகளை பெற்ற சீமான் டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டார்.

    Advertisement
    அம்பை தொகுதியில் சீமானின் பொது வேட்பாளர் திட்டம்.. திமுக, அதிமுக ஆதரவு கொடுக்கவில்லையா? பின்னணி

    சொந்த தொகுதியில் டெப்பாசிட் இழந்தார்

    2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். காரைக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட டிகே பிரபு 1,01,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் பிடித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மாங்குடி 55,284 வாக்குகள் பெற்றார். 3 ஆம் இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிடித்தது. இதனால் 4 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட சீமான் 30,793 வாக்குகள் பெற்று டெபாசிட்டையும் பறிகொடுத்தார்.

    Advertisement
    சிரிப்பதா, அழுவதா? ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு சேம்பு பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? சீமான் கேள்வி

    அம்பை தொகுதி கை கொடுக்குமா?

    விரைவில் அறிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தேர்தல் களமும் சீமானுக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் இந்த தொகுதியில் பலமிக்க கட்சிகளாக உள்ளன. ஆளும் கட்சியான தவெகவும் கடும் போட்டி கொடுத்தால், அம்பாசமுத்திரத்திலும் கடும் போட்டியை சீமான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே அரசியல் வல்லுனர்கள் கருத்தாக உள்ளது.

    English Summary

    Seeman, the coordinator of the Naam Tamilar Katchi, has announced his intention to contest the upcoming Ambasamudram by-election. Here, you can find details regarding how many elections he has contested to date, the constituencies he has run from, and the number of votes he secured.