எனக்குனே வருவீங்களா? கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.. சீமானுக்கு விஜய் வேட்டு! சரிந்த வாக்கு வங்கி!

  • சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருக்கும் நிலையில் 2 தொகுதிகளையும் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளது. அதிமுக, திமுக தங்கள் டெபாசிட் தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், கம்யூனிஸ்ட்களும் நாம் தமிழர் கட்சியும் டெபாசிட் இழந்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி சட்டசபை தேர்தலில் 4 சதவீத வாக்குகளால் மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்தது. தற்போது அதைவிட குறைவான வாக்குகளையே இடைத்தேர்தலில் பெற்றுள்ளது.

    Advertisement

    பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் மதுராந்தகம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி இந்த தேர்தலில் நிலவிய நிலையில்2 தொகுதிகளையும் தவெக கைப்பற்றியுள்ளது.

    Advertisement

    தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் களம் கண்டார். கடந்த தேர்தலில் சுமார் 81 ஆயிரம் வாக்குகளை பெற்ற அவர் இந்த தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இதனால் சுமார் 14,000 வாக்குகள் அவருக்கு சரிந்துள்ளது.

    இதேபோல மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். தற்போதைய இடைத்தேர்தலில் 74 ஆயிரம் வாக்குகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த தேர்தலை விட 5 சதவீத வாக்குகள் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கடந்த தேர்தலை விட திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    சுமார் 2 லட்சம் வாக்காளர்களை கொண்ட தாராபுரம் தொகுதியில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் வாக்குகள் பதிவாகின. தமிழக வெற்றி கழகம் 66,000 வாக்குகளை கைப்பற்றிய நிலையில் ,அதன் வாக்குகள் 13 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி 15 சதவீதம் குறைந்து இருக்கிறது. திமுகவுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 0.42% வாக்குகள் குறைந்து இருக்கின்றன.

    இதே போல மதுராந்தகத்தில் திமுகவின் வாக்கு வங்கி 1 சதவீதமும் அதிமுகவின் வாக்கு வங்கி 9 சதவீதமும் சரிந்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் சுமார் 75 ஆயிரம் வாக்குகளை அள்ளிய நிலையில் 39.96 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக . 54 ஆயிரம் வாக்குகளை பெற்று 29.15 சதவீதத்துடன் திமுக இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. 25 சதவீத வாக்குகளுடன் அதாவது 47,450 வாக்குகளை பெற்று அதிமுக மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றி கழகம் கடந்த முறை 2வது இடத்தை பிடித்த நிலையில் இந்த முறை 8 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று இருக்கிறது. தாராபுரத்திலும் 13 சதவீத வாக்குகளை கூடுதலாக அள்ளி இருக்கிறது தமிழக வெற்றி கழகம்.

    இதில் சோகமான விஷயம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பெருமளவில் சரிந்து இருப்பது தான். அதாவது கடந்த சட்டசபை தேர்தலை மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 4950 வாக்குகள் அதாவது சுமார் 3.01% வாக்குகளை பெற்றிருந்தது. இந்த இடைத்தேர்தலில் அது 2700 வாக்குகளாக சரிந்து 1.46 சதவீதமாக உள்ளது. இதேபோல தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் சுமார் 6000 வாக்குகள் அதாவது 3 தவீத வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் 5200 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதாவது 2.92% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

    Advertisement

    2021 சட்டமன்ற தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தமிழக அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த நாம் தமிழர் 2024 மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்தை தொட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றது. 2026 தேர்தலில் அதன் வாக்கு வங்கி 4 சதவீதமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வாக்கு வங்கியும் சரிந்துள்ளது நாம் தமிழர் தம்பிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் கடந்த கால வாக்கு வாக்கு வங்கி வரலாற்றை சற்று சுறுக்கமாகப் பார்க்கலாம். 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்ற நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அப்போது சீமான் உள்பட போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவம் தோல்வியடைந்தாலும், கட்சிக்கு 1.7 சதவீத வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    அதன்பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 2.15 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2019 மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சிக்கு 3.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. மேலும் 22 இடைத்தேர்தல்களில் 3.15 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியாக நாம் தமிழர் உருவானது. எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிட்டு இதை சாதித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சூழலில் தான் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்தைத் தாண்டிய வாக்குகளைப் பெற்று, இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றது. அப்போது மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்த நாம் தமிழர் கட்சி, 2026 தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், தனது வாக்கு வங்கியை இழந்துது. தற்போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்துள்ளாதோடு, அக்கட்சியின் விவசாயி சின்னமும் பறிபோகும் வாய்ப்பும் உள்ளது.

    English Summary

    TVK wins the Dharapuram and Madurantakam bypolls as Naam Tamilar Katchi faces a decline in vote share and deposit losses.