“அண்ணாமலை 12ஆம் தேதி மாநாடு நடத்தினால் அரசியல் எதிர்காலம் காலி”.. நியூமராலஜிஸ்ட் கணிப்பால் பரபரப்பு

  • சென்னை: "வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, வரும் 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் மாநாடு நடத்தினால், முதல்வராக இருக்கும் விஜய்யை எவராலும், எப்போதும் வீழ்த்தவே முடியாது. அரசியல் பயணத்தில் அண்ணாமலை காணாமல் போக 96% வாய்ப்புள்ளது" என எண்கணித நிபுணர் ஜே.என்.எஸ்.செல்வன் கணித்துள்ளார்.

    Advertisement

    'வி த லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி 'வி த லீடர்ஸ்' என்ற அரசியல் அமைப்பைத் தொடங்கினார்.

    Advertisement

    முதலில் அமைப்பாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
    மேலும், இந்த இயக்கத்தில் சேருவதற்கான பிரத்யேக தளத்தையும் அவர் அறிமுகம் செய்தார். முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். தற்போது வரை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

    ஜூலை மாதம் முதல் 'வி த லீடர்ஸ்' அமைப்பின் பயிற்சிகள், செயல்பாடுகள் தொடங்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். 'வி த லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், பொள்ளாச்சியில் முதல் மாநாட்டை நடத்தினால் அரசியல் பயணத்தில் அண்ணாமலை காணாமல் போக 96% வாய்ப்புள்ளது என எண்கணித நிபுணர் ஜே.என்.எஸ். செல்வன் கணித்துள்ளார்.

    எண்கணித நிபுணர் ஜே.என்.எஸ். செல்வன் கூறுகையில், ஒரு சேர தி.மு.கவையும், அ.தி.மு.கவையும் எதிர்த்து அரசியல் செய்தார் அண்ணாமலை. இதனால் இவரை ஏராளமான மக்களுக்கு அதிகம் பிடித்து வருங்கால நம்பிக்கைக்குரிய தலைவர் என்ற வரிசையில் இடம்பிடித்தார். தான் சார்ந்திருந்த பாஜகவை தமிழகத்தில் வளர்த்தெடுப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார் அண்ணாமலை.

    அண்ணாமலை அரசியல் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனாலும் அண்ணாமலைக்கு அடுத்து அரசியலில் புகுந்து தமிழ்நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார் விஜய். இதற்கு காரணம் C. JOSEPH VIJAY = 42 ஆம் எண் தான் காரணம், அதற்கும் காரணம் அண்ணாமலை தனது தனித்துவத்தை காண்பிக்காமல் இருந்ததால் தான் விஜய் முதலமைச்சராக முடிந்தது.

    Advertisement

    இப்போது ஒரு தனி அமைப்பை K.ANNAMALAI = 42 ஆம் எண்ணில் இருப்பவர் ஆரம்பித்துவிட்டார். விஜய்யும் 42 என்ற 6 ஆம் எண்தான் அண்ணாமலையும் 42 என்ற 6 ஆம் எண்தான்.

    அதிமுகவும் மெலிந்துவிட்டது, திமுகவும் நலிந்துவிட்டது அண்ணாமலைக்கு இது ஒரு சரியான காலகட்டம். ADMK, DMK, பொதுவானவர்கள், சீமான் கட்சியினர், போன்றோருக்கு புகலிடமே அண்ணாமலை தான். ஆனால் இவர் ஆரம்பித்துள்ள WE THE LEADERS 48 - 3 என்ற அமைப்பின் கூட்டு எண் K.ANNAMALAI = என்ற 42 - 6 என்றைக்கும் ஆகாத 3 ஆம் எண்ணில் உள்ளது முதல் தவறு பொதுவாக 3 ஆம் எண்ணிற்கும், 6 ஆம் எண்ணிற்கும் அறவே ஒத்து வராது.

    Advertisement

    இதை விட அபாயம், வரும் 12.7.2026 அன்று பொள்ளாச்சியில் முதல் மாநாடு அண்ணாமலை போடப்போகிறாராம். இந்த 12 ஆம் தேதி மாநாடு மட்டும் நடைபெற்றால், முதல்வராக இருக்கும் விஜய்யை எவராலும், எப்போதும் வீழ்த்தவே முடியாது.

    காங்கிரஸாரை வீழ்த்த கட்சி ஆரம்பித்த CN அண்ணாதுரை தொடர்ந்து அதிக நாட்கள் முதல் அமைச்சராக இருக்க முடியவில்லை. காரணம் அண்ணாதுரை 15 என்ற 6 ஆம் எண்ணில் பிறந்தார், இவர் ஆரம்பித்த Dravida Munnetra Kazhagam கூட்டு எண் 75 என்ற 3ஆம் எண்.

    M. KARUNANITHI பிறந்த தேதி 3. எனவே கட்சியை கையில் பிடித்துக் கொண்டு வெகு காலம் முதல்வராக இருந்தார். M G Ramachandran பிறந்த தேதி 17 என்ற 8 ஆம் எண் All India Anna dravida munra Kazhagam கூட்டு எண் 116 என்ற 8ம் எண் எனவே இவரும் இறுதி வரை முதல்வராக இருந்தார்.

    Advertisement

    C. JOSEPH VIJAY 22 என்ற 4 ம் எண்ணில் பிறந்துள்ளார். இவர் கட்சியான TAMILAGA VETTRI KAZHAGAM 64 என்ற கூட்டு எண்ணில் அமைந்ததாலும், வாக்கு எண்ணிக்கை நாள் 4.6.2026 என்ற 4 ம் எண்ணில் இருந்ததாலும் வெற்றி பெற்று முதல்வரானார் விஜய்.

    K. ANNAMALAI = 42 என்ற 6 ம் எண்ணில் பெயர் எண் அமைந்துள்ளது வெகு சிறப்பாகும். WE THE LEADERS = என்ற பெயர் எண் 48 என்ற 3ம் எண் வருவதும், 12.7.2026 ல் பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்தாலும் அரசியல் பயணத்தில் அண்ணாமலை காணாமல் போக 96% வாய்ப்புள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Numerologist JNS Selvan has predicted that if 'We the Leaders' founder Annamalai holds a conference in Pollachi on the 12th, no one will ever be able to defeat Vijay—who would then be the Chief Minister—and there is a 96% chance that Annamalai will fade into oblivion in his political journey.