கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்.. தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

  • சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

    Advertisement

    பணி நிரந்தரம் உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை, போலீசார் பேச்சுவார்த்தை என அழைத்துச் சென்று மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் மயக்கமடைந்துள்ளனர். போராடும் செவிலியர்களை கைது செய்ய போலீஸ் வாகனங்கள் வந்த நிலையில், அதனை மறித்த செவிலியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செவிலியர்கள் செல்போன் டார்ச் ஒளியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். செவிலியர்கள் போராட்டம் தொடர்வதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், "சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்ற செவிலியர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல.

    Advertisement

    கைது செய்யப்பட்டுள்ள அனைத்து செவிலியர் சங்க நிர்வாகிகளையும், செவிலியர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Nurses who staged a protest in Chennai pressing for demands, including the regularization of their employment, have been arrested. Meanwhile, the Communist Party of India has urged the Tamil Nadu government to release them immediately.