சென்னை விமான நிலையத்தில் 2வது கேப் பிக்-அப் மையம் செப்டம்பரில் திறப்பு

  • சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2வது கேப் பிக்-அப் மையம் செப்டம்பரில் மட்டுமே திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .
    மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் திறந்து வைக்க உள்ளதால், பிளாசாவை திறப்பதற்கான திட்டமிடல் செய்யப்பட வேண்டும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    தற்போதுள்ள ஒரே ஒரு கேப் பிக்-அப் மையத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கூடுவதால், குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பெரும் நெரிசல் ஏற்படுவதுதான் சென்னையில் பெரும் பிரச்சனையாக உள்ளது. விமானம் இறங்கிய பிறகு, டாக்சி பதிவு செய்துவிட்டு அது பிக்-அப் பகுதிக்கு வந்து சேர பயணிகள் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக புகார் அதிகமாக உள்ளது. . குறிப்பாக T1 (உள்நாட்டு) மற்றும் T4 முனையங்களில் இருந்து பயணிகள் தங்கள் கனமான லக்கேஜ்களைச் சுமந்து கொண்டு தற்போதைய பிக்-அப் பகுதிக்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.

    Advertisement

    இந்த சூழலில் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது கேப் பிக்-அப் மையத்தைப் பயன்படுத்துவதற்கான காத்திருப்பு, ஆகஸ்ட் மாதக் கெடுவையும் தவற விட்டுவிட்டது. இந்த வசதி தயாராக இருந்து, அனுமதியும் பெறப்பட்டிருந்தாலும், செப்டம்பர் மாதத்தில்தான் திறக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன

    மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இரண்டாவது கேப் மையத்தை திறந்து வைக்க உள்ளதால், திட்டமிடல் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும், எனவே திறப்பு விழா செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் AAI அதிகாரிகள் தெரிவித்தனர். "இது நிச்சயம் செப்டம்பருக்கு மேல் தாமதமாகாது" என்று ஓர் அதிகாரி கூறினார்.

    Advertisement

    அமைச்சக அதிகாரிகள் திறப்பு விழாவிற்கு வருவதற்கு முன், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஒழுங்கு முறை அதிகாரிகளும் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர்டிங் பாயிண்ட்டைத் திறப்பதில் ஏற்படும் தாமதமே சமீபகாலமாக விமானப் பயணிகளின் மிகப்பெரிய புகாராக இருந்து வருகிறது.

    இந்த பிளாசா ஆயத்தமாகும் போது, பெரும்பாலான உள்நாட்டுப் பயணிகளைக் கையாளும டெர்மினல் 1(T1) முனையத்தில் இருந்து வரும் பயணிகள், கேப் போர்டிங் பாயிண்ட்டை எளிதாக அணுக முடியும்.
    இது முடிந்த பிறகு, T1 முனையத்தில் இருந்து buggy வாகனங்களை மாற்றவும், T2 சர்வதேச முனையம் மற்றும் T4 உள்நாட்டு முனையத்திற்கு அத்தகைய வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்திய விமான நிலைய ஒழுங்கு முறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
    "T4 உள்நாட்டு முனையத்திலிருந்து பல அடுக்கு கார் நிறுத்துமிடம் வரையிலான பாதையின் ஒரு சிறிய பகுதி இன்னும் திறந்தவெளியாகவே உள்ளது. பயணிகள் மழையில் நனையாதவாறு அவற்றை மூடுவோம். இந்தப் பணியும் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படவுள்ளது. T4 முனையத்திலிருந்து பக்காவைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அது கிடைக்கும், மேலும் பாதையும் முழுமையாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்" என்று கூறினார்.

    English Summary

    Officials stated that the second cab pick-up point at Chennai Airport would open only in September.