எண்ணெய் விலை உயர்ந்ததற்கு காரணம் என்ன? மக்கள் சிரமப்படுறாங்க.. வியாபாரிகள் சொல்வது என்ன?

  • சென்னை: எண்ணெய் விலை உயர்வால் மக்கள் அதிகளவில் பாதிப்பு அடைவதாக எண்ணெய் கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு விலை அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளதாக கூறிய கடை வியாபாரிகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் எண்ணெய் வித்துகளின் குறைந்தபட்ச விலை ரூ.115ஆக இருப்பதாக கூறியுள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் அரிசி விலை மட்டுமின்றி எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம் லிட்டர் ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில், தற்போது ரூ.140ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் செப்டம்பரில் ரூ.150க்கு விற்பனையாகி வந்த சூரியகாந்தி எண்ணெய் விலை, தற்போது ரூ.160ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் எள் உற்பத்தி குறைந்துள்ளதால், கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. இது நடப்பாண்டு இறுதியில் இன்னும் மோசமாகலாம் என்று கருதப்படுகிறது. சூரியகாந்த் எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்திருப்பதால், விலை சற்று அதிகரித்துள்ளது.

    ஆனால் விதை எண்ணெய்கள் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சாமானிய மக்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக எண்ணெய் மற்றும் பருப்பு வியாபாரிகள் பேசுகையில், உருட்டு பருப்பு ரூ.120 விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.142.50க்கு விற்பனை செய்து வருகிறோம். துவரம் பருப்பு விலையும் ரூ.22 வரை அதிகரித்துள்ளது.

    Advertisement
    6 ஆண்டுகளில் இல்லாத சரிவு.. கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி.. இந்தியாவுக்கு லாபம்!

    நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய் உள்ளிட்டவை விலை 20% வரை அதிகரித்துள்ளது. அதேபோல் கடலை பருப்பு ரூ.110ல் இருந்து ரூ.118.50ஆக உயர்ந்துள்ளது. இதனால் கடலெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. எள் விலை ரூ.107ல் இருந்து குறைந்தபட்ச விலையாக வெளி மாநிலங்களில் இருந்தே ரூ.115ஆக உள்ளது. இதனால் நல்லெண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் இப்படி விலை உயர்ந்தால், எப்படி வியாபாரம் செய்வது என்றே தெரியவில்லை. மக்கள் நாங்கள் தான் விலை ஏற்றிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் விலைவாசி கூடுவது மக்களுக்கு புரியவில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Oil Price hike: Oil Merchants Highlight Consumer Distress as Rising Input Costs Push Edible Oil Prices Up