சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி.. விஜய் வெளியிட்ட மிகமுக்கிய அறிவிப்பு!

  • சென்னை: சென்னையில் சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல் சர்வதேச மோட்டார் பந்தயங்களை நடத்தும் வகையில் மோட்டார் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும், சென்னையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் இது உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அண்மையில் செம்மஞ்சேரி பகுதியில் வரவிருந்த விளையாட்டு நகரம் திட்டத்தை தவெக அரசு கைவிட்டது. இந்த நிலையில் சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும்.

    Advertisement

    சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும். அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக் கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாக திகழும்.

    Advertisement

    இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கு ஏற்ப உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

    இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை கண்டறிந்து பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் மூலமாக சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார்.

    English Summary

    Olympic City: CM Vijay Announces International-Standard Olympic City and Motor Sports City in Chennai