சென்னை: ''நம்ம என்ன பேசினாலும் ஏதாச்சும் சொல்லத்தான் போறாங்க. ஒன்னு புதுசா உருவாகுதுனா ஒரு அதிர்வு இருக்கத்தான் செய்யும். இவரை யாரோ இயக்குராங்க.. இவங்க பக்கம் யாரோ இருக்காங்க.. அவங்க இருக்காங்க.. இவங்க இருக்கா.. யாரும் இல்லை. என் பின்னால் இருப்பது ரசிகர்கள். என் பக்கம் மக்கள்.. மக்கள் என் பக்கம்'' என்று 'ஓம்' பட விழாவில் நடிகர் தனுஷ் பேசினார். மேலும் அடுத்து என்ன? என்ற திட்டத்தையும் அவர் மேடையிலேயே உடைத்து பேசியபோது ரசிகர்கள் கைத்தட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.
நடிகர் தனுஷ் 'ஓம்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 20 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடந்தது. இதுதொடர்பாக நடிகர் தனுஷ் பேசியதாவது: '' நம்ம என்ன பேசினாலும் ஏதாச்சும் சொல்லத்தான் போறாங்க. அதனால் பேசாம இருக்க முடியாது. ஏதாச்சும் பேசி தான் ஆகணும். ஒன்னு புதுசா உருவாகுதுனா ஒரு அதிர்வு இருக்கத்தான் செய்யும். இவரை யாரோ இயக்குராங்க.. இவங்க இயக்குராங்க.. பின்னால் யாரோ இருக்காங்க.. அவங்க இருக்காங்க.. இவங்க பக்கம் யாரோ இருக்காங்க.. அவங்க இருக்காங்க.. இவங்க இருக்கா.. யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது ரசிகர்கள். என் பக்கம் மக்கள்.. மக்கள் என் பக்கம்.. எண்ணம் போல் வாழ்க்கை.. என் எண்ணம் யார் மீது என்று சொல்ல வேண்டாம். நீங்கள் தான் என் வாழ்க்கை. ஒருதம்பி சொன்னது போல் இதயம் 'லப்டப்.. லப்டப்னு' தான் துடிக்கும். ஆனால் எனக்கு 'பேன்ஸ்.. பேன்ஸ்'னு தான் துடிக்கும்.'' என்றார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், ''நீங்கள் சினிமாவிற்கு வந்து 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு ரசிகர்கள். அடுத்த ஆரம்பம் என்ன? சார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தனுஷ், ''''அடுத்த ஆரம்பம் தமிழரசன் பச்சை முத்துவின் படம். அதுதான் அடுத்த படம். அந்த இயக்குநரை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். இன்னும் ஒரு வாரம் சூட்டிங் போனால் புரிந்து கொள்வேன். அந்த படத்தை ரொம்ப பேன்ஸ்க்கான படமாக இருக்கும். . d56 ஓஜி 'பேன்பாய் சம்பவமாக' இருக்கும். அதேபோல் 'ஓம்' படத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் ஆங்காங்கே வரும். அந்த சஸ்பெண்ஸை இங்கே சொல்ல விரும்பவில்லை'' என்றார்.