ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாலி.. மதுராந்தகம் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

  • செங்கல்பட்டு: ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி என்று மதுராந்தகம் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். கரூரில் 41 பேர் பலியான போது எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ஓடிச் சென்றவர் விஜய் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளின் தயவால் தான் தவெக ஆட்சியை அமைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் ஏற்கனவே வாக்கு சேகரித்துவிட்ட நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

    Advertisement

    இந்த பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், செப்டம்பர் 27.. கடந்த ஆண்டு இதே நாளில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். கரூரில் பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று 10 மணி நேரம் தாமதமாக சென்று, அங்கிருந்த மக்களுக்கு தண்ணீர் வசதி கூட ஏற்படுத்தாமல் இட நெருக்கடி ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 41 உயிர்கள் பறிபோன நாள்.

    இந்த சம்பவத்திற்காக இன்றைய முதல்வர், அன்று ஆறுதல் கூட கூறவில்லை. ஒரு ஆறுதல் கூட சொல்லாமல், மக்களை சந்திக்காமல் திருச்சியில் இருந்து சென்னைக்கு ஓடி போனார். திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை. எந்தவொரு குற்றவுணர்ச்சியோ, மனசாட்சியோ இல்லாதவர் தான் ஓடுகாலி முதல்வர்.

    Advertisement

    இன்று அவர் முதலமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால் அவரால் நிம்மதியாக தூங்க முடியாது. எதிர்க்கட்சியாக இருந்த போது ஓம் சக்தி, பராசக்தி என்று நம்மை திட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். நாம் ஒன்று சொல்லுவோமா.. ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாலி.. 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.

    இது இயற்கையாக வந்த இடைத்தேர்தல் கிடையாது. சோபா அனுப்பி நமது கூட்டணி கட்சிகளை அழைத்தார். அதிமுகவை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சோபா அனுப்பினார். திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் பரப்பினார். ஆனால் விஜய் புதிய டெக்னாலஜியாக எம்எல்ஏ-க்களை தூக்கிவிட்டார்.

    Advertisement

    10 நாட்களில் எம் எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம் சென்றுவிட்டனர். எவ்வளவு திமிர் இருந்தால், அவர்கள் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள்? ஆனால் தொகுதி மக்கள் தவெக வேட்பாளர்களை விரட்டியடிக்க தொடங்கிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Om Kali, Jai Kali, TVK Is an Odugali, Udhayanidhi Stalin Fiery Campaign Attack on CM Vijay