போக்குவரத்து துறை அமைச்சர்தான் எல்லாத்துக்கும் காரணம்.. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பரபர குற்றச்சாட்டு

  • சென்னை: கிளாம்பாக்கத்தில் பயணிகள் சிரமத்திற்கு போக்குவரத்து அமைச்சரே காரணம் என ஆம்னி பஸ் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தவெக அரசு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு அமைச்சர்களும் கொஞ்சம் ஸ்பீடாக இருந்தால் தான் முடியும். போக்குவரத்து அமைச்சர் வந்து ஒரு பொறுப்பற்ற அமைச்சராக தான் இருக்கிறார். போக்குவரத்து துறை என்பது பொது மக்களுடன் சார்ந்த துறை.. இதற்கு போட்டு இருக்கிற அமைச்சர் கொஞ்சம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் சொந்த ஊர் செல்வதற்குள் படாத பாடு பட வேண்டியிருந்தது.

    Advertisement

    போக்குவரத்து அமைச்சரே காரணம்

    ஆம்னி பஸ்களில் செல்லாலம் என்றால் கட்டணங்களை பார்த்து பயணிகளுக்கு மயக்கம் வராத குறைதான். சாதாரண நாட்களில் 700 முதல் ஆயிரம் வரை வசூலிக்கப்பட்ட சீட்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டணக்கொள்ளையில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகளும் அபராதம் விதித்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கே இப்படி என்றால், இன்னும், தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு நிலமை என்ன ஆக போகிறதோ என பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்தீபன் மொத்த குளறுபடிகளுக்கும் காரணம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    பொறுப்பற்ற அமைச்சராக இருக்கிறார்

    பட்ஜெட்டுக்கு முன்பு போய் பார்த்த போது என்ன சொன்னார்கள் என்றால், பட்ஜெட் முடிந்ததும் நாங்க சொல்றோம் என்றார்கள். ஆனால் இப்போது வரை எதுவும் சொல்லவில்லை. போக்குவரத்து அமைச்சர் வந்து ஒரு பொறுப்பற்ற அமைச்சராக தான் இருக்கிறார். தவெக அரசு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அமைச்சர்களும் கொஞ்சம் ஸ்பீடாக இருந்தால் தான் முடியும்.

    போக்குவரத்து துறை என்பது பொது மக்களுடன் சார்ந்த துறை.. இதற்கு போட்டு இருக்கிற அமைச்சர் கொஞ்சம் ஆக்டிவாக இருக்க வேண்டும். ஆக்டிவாக இருந்து பொதுமக்களுக்கு ஏதும் பிரச்சினை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். போக்குவரத்து அமைச்சர் எங்களை கூப்பிட்டு பேசியிருக்க வேண்டும். இவ்வளவு பிரச்சினைக்கும் போக்குவரத்து அமைச்சர் தான் காரணம்..

    Advertisement

    80 வண்டிகளுக்கு எஃபெக்ட் கொடுக்கவில்லை

    250 பெர்மிட் ரிலீஸ் பண்ணவில்லை. வண்டி இல்லை என்று ரேட்டை கூட போட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை. 80 பேர் வந்து கொடுத்த பெர்மிட்டுக்கு எஃபெக்ட் கொடுக்க வேண்டும் போக்குவரத்து ஆணையம். கடந்த ஒரு மாதமாக கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் புது வண்டிகள். அவர்களுக்கு பெர்மிட் கொடுத்து இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு ஓட்டியிருக்கலாம். அத கொடுக்கவே இல்லை. புது வண்டிகள் 80 வண்டிகளுக்கு எஃபெக்ட் கொடுக்கவில்லை. அதை கொடுக்காமல் எப்படி ஓட்ட முடியும்.

    அந்த 80 வண்டிகளுக்கும் ஆன்லைனில் போட்டிருந்த டிக்கெட்டுகளை கேன்சல் போட்டு விட்டார்கள். இதனால் தான் வண்டி கிடைக்காமல் அவர்கள் தவிக்கிறாங்க.. பெர்மிட் கொடுக்காமல் ஓட்ட முடியாது. அரசு தான் எஃபெக்ட் கொடுத்து இருந்திருக்க வேண்டும்" என்றார்.

    English Summary

    Omni Bus Association has accused the Minister himself of being responsible for the traffic chaos during Vinayagar Chaturthi. Even if the TVK government intends to do good, it can only succeed if the ministers act with a bit more urgency and efficiency; the Transport Minister, however, has proven to be irresponsible.