அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க ரெடி. விஜய்யை சந்தித்த சங்கத்தினர் பேட்டி

  • சென்னை: அரசு பேருந்து கட்​ட​ணத்​திலேயே 500 ஆம்னி பேருந்​துகளை வருடம் முழுவதும் இயக்கத் தயா​ராக உள்​ள​தாக ஆம்னி பேருந்​துகள் உரிமை​யாளர்கள் தெரி​வித்​துள்​ளனர். முதல்வர் விஜய்யை சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இதுதொடர்பாகப் பேசியுள்ளனர்.

    Advertisement

    சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் ஜோசப் விஜய்யை ஆம்னி பேருந்​துகள் உரிமை​யாளர்​கள் மற்​றும் ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் நேற்று சந்​தித்​துப் பேசினர். பிற மாநிலங்களில் உள்ளதைப்போல் தமிழ்நாட்டிலும் சுற்றுலா பேருந்துகளுக்கு தனி பர்மிட் வழங்க வேண்டும் என்பது ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.

    Advertisement

    அதைத்தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய இந்தச் சங்​கத்​தின் தலை​வர் பாண்டியன் கூறுகையில், "விழாக்​காலங்​களில் கட்டண உயர்வு என்ற குற்​றச்​சாட்டு தொடர்ந்து பல ஆண்​டு​களாக வைக்​கப்​பட்டு வரு​கிறது. அதற்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில், எங்​கள் சங்​கத்தைச் சேர்ந்த 500 பேருந்துகள் ஆண்டு முழு​வதும் அரசு பேருந்து கட்​ட​ணத்​திலேயே இயக்​கு​வதற்கு அனு​மதி கோரி விண்​ணப்​பம் கொடுத்​துள்​ளோம். 500 பேருந்​துகளை அரசு பேருந்து கட்​ட​ணத்​திலேயே இயக்கத் தயா​ராக இருக்​கிறோம் என்று கூறி​யுள்​ளோம். முடிவு செய்து சொல்​வ​தாக கூறி​யிருக்​கிறார்​கள்.

    ஆம்னி பேருந்​துகளுக்​கும் சுற்​றுலா பேருந்​துகளுக்​கும் தனித்​தனி​யாக பெர்​மிட் வழங்க வேண்​டும் என்ற கோரிக்​கையை வைத்​துள்​ளோம். அது பரிசீலனை​யில் இருப்​ப​தாக முதல்வர் கூறி​யுள்​ளார். சுற்​றுலா பேருந்​துகளுக்கு அனு​மதி கொடுத்​தால் சுற்​றுலா வளர்ச்சி அடை​யும். தற்​போது ஒரு ரூபாய் லஞ்​சம் இல்​லாமல் 40 பேருந்துகளுக்கு பெர்​மிட் கிடைத்​துள்​ளது.

    Advertisement

    கடந்த ஆட்​சி​யில் இதே பெர்​மிட் வாங்க ரூ.5 லட்​சம் கொடுத்​தோம். ஆர்​டிஓ அலு​வல​கத்​தில்​தான் முதல் ஊழலே இருக்​கும், ஆனால், இப்​போது யாருமே லஞ்​சம் கேட்​பது இல்லை. இந்த மாற்​றத்தை நாங்​கள் வரவேற்​கிறோம். முன்பு அமைச்​சர்​களிடம் போய்​விட்​டுத்​தான் வரவேண்​டும். இப்​போது அதி​காரி​களே கொடுக்​கிறார்​கள். இதுபோன்ற மாற்​றம் நல்ல வரவேற்பை பெற்​றுள்​ளது. இப்​போது எல்லா வேலைகளும் எந்த லஞ்​ச​மும் இல்​லாமல் நடக்​கிறது.

    அதி​காரி​களை மாற்​றிக்​கொண்டே இருக்​கிறார்​கள். இதனால், இடைத்​தரகர்​களுக்கு வேலை நடப்​பது இல்​லை. இடைத்​தரகர்​கள் மறு​படி​யும் பணம் கொடுக்க முயற்சி செய்​கிறார்​கள். அவர்​களுக்கு ஒத்​துழைப்பு வழங்​காத பட்​சத்​தில் பொய்​யான தகவலை சொல்லி இடமாற்​றம் செய்ய வைக்​கிறார்​கள்​" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Omni bus owners have announced their readiness to operate 500 omni buses throughout the year at government bus fare rates. Representatives from the Omni Bus Owners' Association discussed this matter when they met Chief Minister Vijay.