Gen Z Students vs DMK: தற்குறிகள் என விமர்சித்தது தான் திமுக தோல்விக்கு காரணமா? சூடாக நடந்த விவாதம்!

  • சென்னை: ஒன் இந்தியா தமிழ் சார்பில், திமுகவைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் vs Gen Z மாணவர்கள் இடையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், தவெக-வை ஆதரிக்கும் Gen Z மாணவர்கள் எழுப்பிய சூடான கேள்விகளுக்கு, திமுக நிர்வாகிகள் பதில் அளித்தனர்.

    Advertisement

    திமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், திமுக சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் அலீம் அல் புகாரி, திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் சையது ஹஃபீசுல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

    Advertisement

    சூடாக நடந்த இந்த விவாதத்தில், திமுக பழம்பெருமை பேசும் கட்சியாக இருப்பதாகவும், இளைஞர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு இல்லை என்றும், Gen Z மாணவர்கள் வைத்த விமர்சனத்துக்கு திமுக சார்பில் பங்கேற்ற நிர்வாகிகள் உடனடி பதில் அளித்தனர். இளைஞர்களை தற்குறிகள் என விமர்சித்தது தான் திமுகவின் தோல்விக்கு காரணமா? என்ற சட்டக் கல்லூரி மாணவியின் கேள்வி உட்பல Gen Z மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு திமுகவினர் பதில் அளித்தனர்.

    திராவிட முன்னேற்றக் கழகம், கட்சியை மீட்டெடுப்பதற்கான யுத்தத்தை அல்ல, தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்கான யுத்தத்தைத் தொடங்க வேண்டியிருக்கிறது. தவெக அரசு சமூகச் சீர்கேட்டை தொடங்கி இருக்கிறது, அதனை முதலமைச்சரே முன்னின்று செய்கிறார் எனக் காட்டமாகக் கூறியுள்ளார் மருது அழகுராஜ்.

    Advertisement

    அந்தக் காலத்து Gen Z இளைஞர்களால் 1967ல் ஆட்சியில் அமரவைக்கப்பட்ட இயக்கம் திமுக, தனி மனித ஒழுக்கம் சார்ந்து தவெக தலைமை செய்கிற தவறுகளைக் கூட ஏற்கிற மனநிலைக்கு இன்றைய தவெக இளைஞர்கள் சென்றிருக்கிறார்கள் என்றார் அலீம் அல் புகாரி.

    ஒன் இந்தியா தமிழ் ஒருங்கிணைத்த DMK vs Gen Z கலந்துரையாடலின் முதல் பகுதியை முழுமையாகப் பார்க்க:

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை இடம் தருவது ஆளுநர் ரவியை உறுத்தியது, ஆர்.எஸ்.எஸ்ஸை உறுத்தியது. ஆளுநர் ரவியின் குரலும், விஜய்யின் குரலும் ஒன்றாக இருக்கிறது, அதையும் மக்களிடம் நார்மலைஸ் செய்கின்றனர், சட்டப்பேரவையை சர்க்கஸ் கூடாரமாக மாற்றுகிறார் முதல்வர் விஜய் என சூரியா கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.

    Advertisement

    விஜய் தன்னை பாதிக்கப்பட்டவராகவே நினைத்துக் கொள்கிறார், பிரபஞ்சமே தனக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் அதிலிருந்து அவர் மீண்டு வந்ததாகவும் நினைத்துக் கொள்கிறார், சட்டமன்ற நிகழ்வுகளையே சினிமா ஷூட்டிங் ஆக்குகிறார் என சையது ஹஃபீசுல்லா கூறியுள்ளார்.

    English Summary

    OneIndia Tamil organized a discussion event featuring a dialogue between senior DMK functionaries and Gen Z students. During the event, DMK functionaries responded to spirited questions raised by Gen Z students who support TVK.